search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
    X

    மலையடிவார சீனிவாசபெருமாள்கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    புரட்டாசி 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

    • 3-ம் சனிக்கிழமையான இன்று அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி 3-ம் சனிக்கிழமையான இன்று அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பரிவார தெய்வங்களுக்கும் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் திருவேங்கட மலையப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சுக்காம்பட்டி சித்தர் ஸ்ரீலஸ்ரீ துரை ஆதித்தன் சாமிகள் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி ஆசி வழங்கினார்.

    இதேபோல் மலையடிவாரம் சீனிவாசபெருமாள், வடமதுரை சவுந்திரராஜபெருமாள், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கபெருமாள், கோபிநாதசாமி கோவில், வி.மேட்டுப்பட்டி பேசும்பெருமாள், சன்னதிதெரு ஆஞ்சநேயர்கோவில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர், நாகல்நகர் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றன.

    நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×