வேடசந்தூரில் மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடிச் சென்ற 2 பேர் கைது

கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடிச் சென்றனர்.புகாரின் பேரில் போலீசார் ஆடு திருடிய 2 பேரை கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் வீட்டு முன்பு கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடிச் சென்றனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஜெகதீஸ்வரன் புகார் அளித்தார். நேற்று இரவு ஆத்துமேடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்த னர்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் ஆட்டு க்குட்டியை திருடியதை ஒத்துக் கொண்டனர். நாயக்கனூரைச் சேர்ந்த போஸ் (வயது32), தோப்பூரைச் சேர்ந்த ஜெயபாலாஜி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆட்டுக்குட்டியை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com