search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை ஒன்றியக்குழு கூட்டம்
    X

    ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    வடமதுரை ஒன்றியக்குழு கூட்டம்

    • வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் அமைக்க ஆவண செய்ய ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.
    • மழைக்காலம் வருவதால் யூனியன் உட்பட்ட பகுதிகளில் பள்ளிக் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும்

    வடமதுரை:

    வடமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் தனலட்சுமி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கீதாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாடியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செந்தில் மணிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. பின்னர் வடமதுரை யூனியன் உட்பட்ட பகுதிகளில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் அமைக்க ஆவண செய்ய ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் கோரிக்கை வைத்தார். மலை கிராமமான மலைப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளதால், சீரமைக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் வெள்ளையன் கோரிக்கை வைத்தார்.

    மழைக்காலம் வருவதால் யூனியன் உட்பட்ட பகுதிகளில் பள்ளிக் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் என்று சுக்காம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி கோரிக்கை வைத்தார். பின்னர் கவுன்சிலர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×