நிலக்கோட்டை அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்த போது தடுமாறி கீழே விழுந்தார்.படுகாயமடைந்த கல்லூரி மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் சக்கிலிய ப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் மகன் முகேஸ்க ண்ணா (வயது18). இவர் ஆத்தூர் அரசு கூட்டுறவு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தனது சகோதரி செல்ல ம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க நிலக்ேகாட்டைக்கு பைக்கில் சென்றார். அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தி னர் அவரை மீட்டு நிலக்கோ ட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்ட முகேஸ்க ண்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com