என் மலர்
திண்டுக்கல்
- மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் கொடைக்கானலில் நடந்தது.
- திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொடைக்கானல்:
மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் கொடைக்கானலில் நடந்தது. கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 17, 18, 21 ஆகிய 3 வார்டுகளை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள மக்களின் குறைகளை ஆன்லைன் மூலம் பெற்று அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொடை க்கானல் நகர் மன்ற தலை வர் செல்லதுரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மனுக்கள் பெற்றனர். 500க்கும் அதிகமான பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய மனுக்கள் அளித்தனர்.
இவர்களுக்கு உடனடி யாக ஆன்லைன் மூலம் பதில் அளிக்க ப்பட்டது. குறைதீர்க்கும் முகாமில் புதிய இலவச வீட்டு மனை பட்டாக்கள், புதிய வீட்டு வரி மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டது. 30 தினங்களுக்குள் இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க ப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஒன்று சேர்ந்து பொது மக்களுடைய குறைகளை கேட்டறிந்து அவர்களுக்குரிய நிவா ரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- கமிஷனர் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1200 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
காலை உணவு திட்டத்திற்கு மேற்கு ரத வீதி நேருஜி நினைவு மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் உணவு கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து 16 பள்ளிகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் செபாஸ்டின் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அட்டவ ணைப்படி அரிசி உப்புமா மற்றும் காய்கறியுடன் சாம்பார் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனை சாப்பிட்டு ஆய்வு செய்தனர். மாணவ ர்களுக்கு வழங்கப்படும் உணவு, கவனமாகவும், தரமா னதாகவும் வழங்க வேண்டும். தொடர் மழை பெய்து வருவதால் சமையல் கூடத்தை எப்போதும் தூய்மை வைத்துக் கொள்ள அறிவுறுத்தினர்.
- நிலக்கோட்டை பேரூராட்சிக்கு ரூ.37 கோடி மதிப்பில் அணைப்பட்டி பேரணையிலிருந்து குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
- சிறுமலை நீர்த்தக்கம், நிலக்கோட்டை சப்-கோர்ட்டு கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில் தான். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என பேசினார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு ரூ.37 கோடி மதிப்பில் அணைப்பட்டி பேரணையிலிருந்து குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசிய தாவது,
மாணவிகளின் நலன் கருதி தி.மு.க. ஆட்சியில் நிலக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். அதேபோல் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு ள்ளது.
மேலும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத அனைத்து பெண்களுக்கும் விரைவில் வழங்கப்படும். நான் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான பிறகு 100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு தினக்கூலி ரூ.250-லிருந்து ரூ.300 வரை வழங்க முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கோட்டை பேரூராட்சி யில் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் நோக்கத்தோடு ரூ.37 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கு, காவேரி தண்ணீர் மட்டும் இல்லாமல் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து குடிதண்ணீர் வழங்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிலக்கோ ட்டையில் தொடங்கப்பட உள்ளது. 1975-ஆம் ஆண்டுகளில் நல்ல தண்ணீர் வழங்க தி.மு.க. ஆட்சி முடிவு செய்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உத்தரவின் பேரில், பேரணையிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டது.
கொடைரோடு அருகே சிறுமலை நீர்த்தக்கம், நிலக்கோட்டை சப்-கோர்ட்டு கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில் தான். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என பேசினார்.
நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., நிலக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் மணிகண்டன், சவுந்தரபாண்டியன், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, பேரூ ராட்சி தலைவர் சுபாஷினி கதிரேசன், துணை தலைவர் முருகேசன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன்,
அம்மைய நாயக்கனூர் நகர செயலாளர் விஜயகுமார், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோகுல்நாத், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பூங்கொடி முருகு, மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் அறிவு என்ற சின்னமாயன், நில க்கோட்டை முக்குலத்தோர் பிரிவு சங்க செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளையராணி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார்.
- எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. தி.மு.க. கவுன்சிலரான என்னை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என புகார் அளித்தார்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் அமைச்சர் இ.பெரியசாமி ரூ. 17 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டம், ரூ.17 லட்சம் மதிப்பிலான நேரடி கொள்முதல் மையம், நரசிங்கபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைப்பதற்கு பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சி களில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளையராணி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. தி.மு.க. கவுன்சிலரான என்னை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய வார்டு பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. எனது வார்டு பகுதியில் திட்டப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்க ப்பட்டு வருகிறது. நானும் தி.மு.க. கவுன்சிலர் தான். பேரூராட்சி நிர்வாகம் என்னை புறக்கணித்து அவமானப்படுத்தி வருகின்றனர் என அழுது கொண்ேட வெளியே கோபமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
- சாலைப்பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் கனரக எந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
- இழப்பீடு வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழியாக பொள்ளாட்சி முதல் காமலாபுரம் வரை விபத்து இல்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு பகுதியாக லக்கையன்கோட்டை கிராமத்தில் சுமார் 1 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த னர். இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் கனரக எந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு மாதத்திற்குள் உரிய இழப்பீடு தொகையை வாங்கி தருவதாக கூறி சமரசம் செய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன.
- தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் இருந்து வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்துள்ளார்.
இதைப் பார்த்த கழிவறைக்கு சென்ற மாணவிகள் கூச்சலிட்டவாறு பதட்டத்துடன் சென்று இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தபோது வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் கதவை சாத்திக் கொண்டு திறக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப் இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சின்னவர் மகன் பெரியசாமி (வயது 24)என்பது தெரியவந்தது.
மேலும் வாலிபர் எதற்காக கழிவறைக்கு சென்றார்? வேறு குற்ற வழக்குகளில் ஏதும் தொடர்புடையவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வடகாடு கிராமத்தில் 2 யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
- யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வடகாடு கிராமத்தில் 2 யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலைக்கிராமத்தில் நேற்று மாலை 2 யானைகள் மலைப்பகுதியை விட்டு கீழே இறங்கி வந்ததை பார்த்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். யானைகளை ஒலி எழுப்பி விரட்டினார்கள்.
இருந்தபோதிலும் இரவு நேரத்தில் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மலைக்கிராம மக்களிடையே பீதி ஏற்ப்பட்டுள்ளது.வடகாடு மலைக்கிராமங்களில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தினால் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் யானைகளை கடடுப்படுத்தவேண்டும் , வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு துணை நிற்க வேண்டும். அவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும்.
- தமிழகத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக த.மா.கா விளங்கும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று த.மா.கா. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எதிரிகளை வீழ்த்த முக்கியமான கட்சிகளுடன் கூட்டணி அமைய வேண்டும். ஆனால் இந்தியா கூட்டணி என்பது முரண்பாடான கட்சிகள் அமைத்த கூட்டணியாக உள்ளது. பல மாநிலங்களில் அந்த கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் மிகப்பெரிய கட்சியாக உள்ளது.
பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் த.மா.கா. நட்புடன் இருந்து வருகிறது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. முக்கிய சக்தியாக இருக்கும். தற்போது வரை த.மா.கா. எந்த கூட்டணியிலும் இல்லை.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் டெல்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு துணை நிற்க வேண்டும். அவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும்.
விவசாயிகளின் நியாயமான போராட்டத்தின் காரணமாக அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும். மழையால் தமிழகத்தில் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. 4 மாதங்களில் எங்களது பிரசாரம் தொடங்கும். மக்களுடன் த.மா.கா. அதிக தொடர்பை ஏற்படுத்தி வருகிறது. நிர்வாகிகள் மக்களிடம் நேரடியாக சென்று பேச மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
பல மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக த.மா.கா விளங்கும். ஜனவரி மாதம் கூட்டணி முடிவை அறிவிப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
- ரெயில்வே பணியா ளர்கள் ஆர்வத்துடன் ரகசிய வாக்கெடு ப்பில் கலந்து கொண்டு தங்களது கருத்து க்களை தெரிவித்த னர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தெற்கு ெரயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்டம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் 50 சதவீதம் பஞ்சப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூட்டேஷன் வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. எஸ்.ஆர்.எம்.யூ. கோட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை யில், திண்டுக்கல் கிளை தலைவர் மூர்த்தி முன்னிலையில் நடந்தது.
எ.ஐ.ஆர்.எப்., எஸ்.ஆர்.எம்.யூ. தொழிலாளர்கள் கலந்து கொண்டு வாக்கு செலுத்தி னர். ெரயில்வே பணியா ளர்கள் ஆர்வத்துடன் ரகசிய வாக்கெடு ப்பில் கலந்து கொண்டு தங்களது கருத்து க்களை தெரிவித்த னர். இதில் பொருளாளர் வெங்கட்ராமன், உதவி தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சாணார்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே வீடுகளின் முன்பு கட்டி இருந்த ஆடுகள் திருடு போனது.
- மினிவேனில் ஆடுகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள கன்னியாபுரம், நத்தமாடிப்பட்டி,மேட்டுக்கடை,அஞ்சுகுளிப்பட்டி, ஆவிளிபட்டி, கோணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே வீடுகளின் முன்பு கட்டி இருந்த ஆடுகள் திருடு போனது.
இந்திலையில் சாணா ர்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் நொச்சிஒடைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினிவேனில் 8 ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சாணார்பட்டி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 40), சிறுமலையை சேர்ந்த பழனிச்சாமி (34), பொன்னகரத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (32), இளையராஜா (43) என தெரியவந்தது.
மேலும் அவர்கள் மினிவேன் மூலம் கிராமங்களில் இரவு நேரத்தில் ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சாணா ர்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 ஆடுகள், மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து 4 பேரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் சிறையில் அடைத்தனர். இந்த ஆடு திருட்டில் இவர்க ளோடு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகராறில் தி.மு.க நிர்வாகியை கல்லால் தாக்கி மண்டையை உடைத்தவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(66). தி.மு.க தெற்கு ஒன்றிய அவைத்தலைவராக உள்ளார். இவர் நிலக்கோட்டை பூமார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பொம்மையசாமி கோவில் அருகே சென்றபோது அதேஊரை சேர்ந்த தி.மு.க கிளைச்செயலாளர் பாஸ்கர்ராஜா(45) என்பவர் அழகர்சாமியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை கீேழ தள்ளி கல்லால் தலையில் ஓங்கி தாக்கினார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அழகர்சாமி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் ஆகியோர் பாஸ்கர்ராஜா மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- ஒப்பந்த தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை, குறைந்தபட்சம் ஊதியம் ரூ.594 வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரின்பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் சேரும் குப்பைகளை சேகரிக்க 160 நிரந்தர தூய்மை பணியாளர்கள் உள்ளனர். மேலும் தனியார் நிறுவனத்தின் சார்பில் 350 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தினந்தோறும் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து அதனை கிடங்கில் ஒப்படைத்து வருகின்றனர். தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பல வார்டுகளில் முறையாக குப்பைகள் வாங்குவதில்லை என்ற புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை, குறைந்தபட்சம் ஊதியம் ரூ.594 வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இருந்தபோதும் அவர்கள் இன்று பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகரின்பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
கமிசனர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் பணியாட்கள் கொண்டு தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி 80 டன் குப்பைகள் சராசரியாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சேரும். அைவ ஒருநாள் அகற்றாமல் விட்டால் கூட மறுநாள் பெரும்சுமையாக மாறிவிடும். இதுதவிர தற்போது பருவமழை காலம் என்பதால் மழைநீரில் குப்பைகள் சேரும்போது கொசுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே குப்பைகள் தேங்காத நிலையை உருவாக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






