என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வேலை நிறுத்தம் குறித்து ரகசிய வாக்கெடுப்பு
    X

    ரகசிய வாக்கெடுப்பில் கலந்துகொண்ட ரெயில்வே ஊழியர்கள்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வேலை நிறுத்தம் குறித்து ரகசிய வாக்கெடுப்பு

    • பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • ரெயில்வே பணியா ளர்கள் ஆர்வத்துடன் ரகசிய வாக்கெடு ப்பில் கலந்து கொண்டு தங்களது கருத்து க்களை தெரிவித்த னர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தெற்கு ெரயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்டம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் 50 சதவீதம் பஞ்சப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூட்டேஷன் வேண்டும்.

    குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. எஸ்.ஆர்.எம்.யூ. கோட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை யில், திண்டுக்கல் கிளை தலைவர் மூர்த்தி முன்னிலையில் நடந்தது.

    எ.ஐ.ஆர்.எப்., எஸ்.ஆர்.எம்.யூ. தொழிலாளர்கள் கலந்து கொண்டு வாக்கு செலுத்தி னர். ெரயில்வே பணியா ளர்கள் ஆர்வத்துடன் ரகசிய வாக்கெடு ப்பில் கலந்து கொண்டு தங்களது கருத்து க்களை தெரிவித்த னர். இதில் பொருளாளர் வெங்கட்ராமன், உதவி தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×