நிலக்கோட்டையில் தி.மு.க நிர்வாகியை தாக்கி மண்டை உடைப்பு

தகராறில் தி.மு.க நிர்வாகியை கல்லால் தாக்கி மண்டையை உடைத்தவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(66). தி.மு.க தெற்கு ஒன்றிய அவைத்தலைவராக உள்ளார். இவர் நிலக்கோட்டை பூமார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பொம்மையசாமி கோவில் அருகே சென்றபோது அதேஊரை சேர்ந்த தி.மு.க கிளைச்செயலாளர் பாஸ்கர்ராஜா(45) என்பவர் அழகர்சாமியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை கீேழ தள்ளி கல்லால் தலையில் ஓங்கி தாக்கினார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அழகர்சாமி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் ஆகியோர் பாஸ்கர்ராஜா மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com