search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை, திண்டுக்கல் பகுதிக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் திட்டம் -அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

    நிலக்கோட்டை, திண்டுக்கல் பகுதிக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் திட்டம் -அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு

    • நிலக்கோட்டை பேரூராட்சிக்கு ரூ.37 கோடி மதிப்பில் அணைப்பட்டி பேரணையிலிருந்து குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
    • சிறுமலை நீர்த்தக்கம், நிலக்கோட்டை சப்-கோர்ட்டு கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில் தான். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என பேசினார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு ரூ.37 கோடி மதிப்பில் அணைப்பட்டி பேரணையிலிருந்து குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசிய தாவது,

    மாணவிகளின் நலன் கருதி தி.மு.க. ஆட்சியில் நிலக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். அதேபோல் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு ள்ளது.

    மேலும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத அனைத்து பெண்களுக்கும் விரைவில் வழங்கப்படும். நான் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான பிறகு 100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு தினக்கூலி ரூ.250-லிருந்து ரூ.300 வரை வழங்க முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கோட்டை பேரூராட்சி யில் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் நோக்கத்தோடு ரூ.37 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கு, காவேரி தண்ணீர் மட்டும் இல்லாமல் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து குடிதண்ணீர் வழங்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிலக்கோ ட்டையில் தொடங்கப்பட உள்ளது. 1975-ஆம் ஆண்டுகளில் நல்ல தண்ணீர் வழங்க தி.மு.க. ஆட்சி முடிவு செய்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உத்தரவின் பேரில், பேரணையிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டது.

    கொடைரோடு அருகே சிறுமலை நீர்த்தக்கம், நிலக்கோட்டை சப்-கோர்ட்டு கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில் தான். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., நிலக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் மணிகண்டன், சவுந்தரபாண்டியன், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, பேரூ ராட்சி தலைவர் சுபாஷினி கதிரேசன், துணை தலைவர் முருகேசன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன்,

    அம்மைய நாயக்கனூர் நகர செயலாளர் விஜயகுமார், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோகுல்நாத், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பூங்கொடி முருகு, மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் அறிவு என்ற சின்னமாயன், நில க்கோட்டை முக்குலத்தோர் பிரிவு சங்க செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×