என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • காட்டெருமை நகர் பகுதியில் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
    • விவசாயியின் கால் பகுதியில் காட்டு மாடு கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுபன்றி, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.

    குறிப்பாக காட்டெருமை நகர் பகுதியில் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டெருமை தாக்கி உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (68). இன்று காலை தனது தோட்டத்தில் பராமரிப்பு பணிக்காக சென்றுள்ளார்.அப்போது பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்பகுதியில் கடந்த 15 நாட்களாக முகாமிட்டிருந்த ஒற்றை காட்டெருமை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.அதனை விரட்ட முயற்சி செய்தபோது விவசாயி மனோகரனை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் கால் பகுதியில் கடுமையாக தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.சம்பவம் அறிந்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த 18-ந்தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று திருஆவினன்குடி கோவில் திருப்புகழ் மண்டபத்தில் வேழ வழிபாடு, ஆனிறைவழிபாடு, ஏழுபரி வழிபாடு, நறும்புகை விளக்க படையல், திருவொளி வழிபாடு நடைபெற்றது.

    பழனி மலைக்கோவிலில் தேவஸ்தான 64 மிராசு பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் அடைதல், பேரொளி வழிபாடு, திருநீறு, திருவமுது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோவில் யானை கஸ்தூரி உள்பட 2 யானைகளுக்கு கஜ பூஜையும், 7 குதிரைகளுக்கும், பசுமாடுகளுக்கு கோபூஜையும் செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றுமாலை திருமகள் திருவழிபாடு, 16 திருக்குடங்களில் திருமகளை பூஜித்தல், 16 வித வேள்வி, 16 கன்னியர், 16 மங்கள வழிபாடு நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து பழனிகிரி வீதி, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி நகராட்சி, தேவஸ்தானம், வருவாய்த்துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சப்-கலெக்டர் தலைமையில் நடந்த இந்த பணியில் போலீசார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 75 ஆண்டுகள் பழமையான இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
    • பழமையான வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டை முதல் அரசபிள்ளைபட்டி வரை ரூ.87.50 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் ரெயில் நிலையம் அருகே கோவில்கள், மசூதி உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் இருந்தன.

    75 ஆண்டுகள் பழமையான இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. வழிபாட்டுத்தலங்களை அகற்றுவது தொடர்பாக இந்து, முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இப்பகுதியில் அமைந்த பழமையான காவடியப்ப சுவாமி கோவில், தன்னாசியப்பன் கோவில், 2 விநாயகர் கோவில், டவுன் பள்ளிவாசல் ஆகியவற்றை இடிக்க நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பாபுராமன், ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி, டி.எஸ்.பி. முருகேசன், முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    பழமையான வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்து விடலாம் என்று தி.மு.க. தொடர்ந்து பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது.
    • தமிழகத்தில் சிறப்பான முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.

    திண்டுக்கல்:

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்து விடலாம் என்று தி.மு.க. தொடர்ந்து பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது. ஆனால் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் சிறப்பான முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.

    அதன்பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்த இயக்கத்தை அழிக்க தி.மு.க. மட்டுமின்றி சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரும் முயன்று வருகின்றனர். ஆனால் இந்த இயக்கம் மீண்டும் வலுவாக உருவாகி வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தான். ஆனால் தற்போது அவர்கள் தங்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 மாத தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்துள்ளதா? இல்லையா என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.

    தி.மு.க.வை கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாற்றி விட்டனர். கோட்டையில் ஸ்டாலின் குடும்பத்தினர் நிழல் முதல்வர்கள் போல வலம் வருகின்றனர். உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கி 10-வது இடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

    தன்னை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்ற தைரியத்தில் சர்வாதிகாரத்தின் உச்சமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் குமுதா பெருமாள், மின்னல் மீனாட்சி சுந்தரம் பேசினர். மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன், ஒன்றிய இணைச் செயலாளர் காளியம்மாள், துணைச் செயலாளர் லதா தர்மராஜ், முன்னாள் அரசு வக்கீல் மனோகரன், மாவட்ட பிரதிநிதி சின்னகோபால், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் முத்துச்சாமி, வேலுச்சாமி, செல்வராஜ், பேரவை பொருளாளர் சிவபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜமோகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சின்ராஜ், பேரவை செயலாளர் ராஜா, இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், மீனவரணி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் ஒன்றிய அவைத்தலைவர் நந்தகோபால் நன்றி கூறினார்.

    • சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக உள்ள பிரையண்ட் பூங்காவில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • பிரையண்ட் பூங்காவில் தற்போது சுற்றுலா பயணிகளிடம் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. மேலும் அதிகாலை வேளையில் உறைபனி காணப்படுகிறது.

    நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததால் தாமதமாக உறைபனி சீசன் தொடங்கியது. பகலில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ், வெப்ப நிலையும், இரவில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் காணப்படுகிறது. இதனால் நகரின் நீர்பிடிப்பு பகுதி தாழ்வான பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.

    அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, ரோஜா பூங்கா உள்ளிட்ட நகரின் உயரமான பகுதிகளிலும் வெண்போர்வை போர்த்தியதுபோல உறைபனி காணப்படுகிறது.

    சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக உள்ள பிரையண்ட் பூங்காவிலும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இங்கு நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் தற்போது கருகி வருகிறது. தொடர்ந்து தற்போது நடவு செய்யப்பட்ட நாற்றுக்கள் மட்டுமே உள்ளது.

    கொடைக்கானலில் இடைவிடாது கொட்டி வரும் குளிர் காரணமாக சொட்டர், கம்பளி ஆடைகளை அணியாமல் யாரும் தெருவில் நடமாட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் வறண்ட வானிலை நீடிக்கும் என்பதால் கொடைக்கானலில் மேலும் சில நாட்கள் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரையண்ட் பூங்காவில் தற்போது சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    சுற்றுலா பயணிகள் காண்பதற்கு மலர்களே இல்லாததால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி, முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் கட்டணம் வசூலிப்பதை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    எனவே மலர்கள் இன்றி இருக்கும் பனிக்காலத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.
    • காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் அழைத்து வரப்பட்டன. அவற்றுக்கு பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

    இதேபோல் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீரர்கள் உறுதிமொழியுடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

    இதில் மாடுபிடி வீரர்களான மயிலாப்பூரை சேர்ந்த ராபின் (வயது 21), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (24), நத்தத்தைச் சேர்ந்த இந்தியன் (21), பார்வையாளர் அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த கெடி (18), மாட்டின் உரிமையாளரான கோம்பைபட்டியை செல்வராஜ் (18) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதில் செல்வராஜ், இந்தியன் ஆகிய 2 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெவ்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதன் முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    • வடமதுரை, அய்யலூர் மற்றும் அ தனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் அதிக அளவு தக்காளி பயிரிடப்படுகிறது.
    • அய்யலூர் தக்காளிக்கு தனி வரவேற்பு இருப்பதால் பேக்கிங் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் மற்றும் அ தனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் அதிக அளவு தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் அய்யலூரில் செயல்பட்டு வரும் தக்காளிகளுக்கான பிரத்யேக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்ட ங்களில் இருந்து வரும் விவசாயிகள் தக்காளிகளை மொத்தமாக கொள்முதல் ெசய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தக்காளிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை யடைந்தனர்.

    தற்போது வெளியூர்க ளுக்கு அதிக அளவு ஏற்றுமதியாவதால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.450 முதல் ரூ.520 வரை விலை ேகட்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் அய்யலூர் தக்காளிக்கு தனி வரவேற்பு இருப்பதால் பேக்கிங் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். தக்காளி விவசாயிகளுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். எனவே அதனை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சோலார் வேலி அமைத்து போதிய அளவு பயன் தரவில்லை. மீண்டும் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.
    • புதிய முயற்சியாக வயல் பகுதிகளையும், தோட்டங்களையும் பல வண்ண சேலைகளைக் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சுற்றுலாவே பிரதான தொழிலாக உள்ளது. இதனை சுற்றி மேல்மலையில் மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கீழ்மலையில் பெருமாள்மலை, அடுக்கம், பேத்துப்பாறை, பண்ணை க்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. உருளைக்கிழங்கு, முட்டை க்கோஸ், கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறி கள் இங்கு விளைவிக்கப்படு கின்றன. இப்பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வனப்பகுதியில் காட்டெ ருமை, காட்டுப்பன்றி, யானை, மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி இடம்பெயரும் போது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனை தடுக்க முள் வேலி, சோலார் வேலி ஆகியவற்றை விவசாயிகள் அமைத்தனர். ஆனால் இந்த முயற்சி போதிய அளவு பயன் தரவில்லை. மீண்டும் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.

    எனவே புதிய முயற்சியாக வயல் பகுதிகளையும், தோட்டங்களையும் பல வண்ண சேலைகளைக் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இதன் மூலம் வன விலங்குகள் ஆட்கள் நடமாட்டம் இருப்ப தாக எண்ணி வருவதில்லை என விவசாயிகள் தெரி விக்கின்றனர்.

    இந்த பல வண்ண சேலை வேலிகள் மலைப்பகுதிகளில் டிரெண்டாகி வருகிறது. இதன் மூலம் வன விலங்குகள் வருவதை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
    • பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிகள் தொடர்பாக இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 27-ந்தேதி பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பணிகள் தொடர்பாக என்னை முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று திருப்பணிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ, கலெக்டர் விசாகன், எஸ்.பி பாஸ்கரன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு ஆகியோரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் விழா நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 65 நிழற்குடைகளில் 19 நிழற்குடைகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக வேள்வி நடைபெறும் இடத்தில் 90 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக 47 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள், நீதியரசர்கள் ஆகியோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துமிடம், தற்காலிக ஆஸ்பத்திரி, குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக பணிகள் குறித்து நாளை மதியம் துறை சார்ந்த அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு நடத்த உள்ளேன். கும்பாபிஷேக பணியில் மேலும் 4 இணைஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவிஆணையர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுடன் கோவில் பணியாளர்களும் இணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்மீக புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். குறைந்த விலையில் இந்த நூல்கள் பக்தர்களுக்கு கிடைக்கும். இதுதவிர ஓலைச்சுவடிகள் குறித்த ஆராய்ச்சி நிலையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய நல்ல நாளாகும்.

    பழனி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    மேலும் பழனி-இடும்பன் மலைக்கோவில் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்ளுக்கு ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். ராஜகோபுரம் உள்ளிட்ட மற்ற கோபுரங்களில் வானத்தில் இருந்து தீர்த்தம் மற்றும் மலர்களை தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி வையாபுரி குளம் தூர்வாரப்பட வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் அதுகுறித்த அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன், கோவில் இணைஆணையர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானல் மலை ப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இங்கு பல்வேறு காய்கறிகள் மட்டுமின்றி பழ வகைகளும் விவசாயம் செய்து வருகின்ற னர்.
    • கால நிலை மாற்றத்தின் காரணமாகவும், வேர் புழு தாக்கத்தின் காரணமாவும் மரங்களில் மர்ம நோய் தாக்கி முற்றிலுமாக அவக்கோடா விவசாயம் பாதிக்க ப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலை ப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இங்கு பல்வேறு காய்கறிகள் மட்டுமின்றி பழ வகைகளும் விவசாயம் செய்து வருகின்ற னர்.

    தொடர்ந்து மலைக்கி ராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, புலியூர், பெரு மாள்மலை, பேத்துப்பாறை மற்றும் பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்களில் அவக்கோடா என்று அழைக்கப்படும் வெண்ணெய்ப் பழ விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது கால நிலை மாற்றத்தின் காரணமாகவும், வேர் புழு தாக்கத்தின் காரணமாவும் மரங்களில் மர்ம நோய் தாக்கி முற்றிலுமாக அவக்கோடா விவசாயம் பாதிக்க ப்பட்டுள்ளது.

    இதனை நம்பி உள்ள விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க தோட்டக்கலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒரு மரத்தில் ஒரு வருடத்திற்கு 1 முதல் 3 டன் வரை காய்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவக்கோடா பழங்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் பராமரிப்புச் செலவுக்கு கூட பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து ள்ளனர்.

    • நகரின் முக்கிய இடங்களில் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.
    • அண்ணாத்த குரூப்ஸ்-திண்டுக்கல் மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    திண்டுக்கல் :

    தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் திகழ்கிறார். இந்த நிலையில் சினிமா உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று கடந்த சில நாட்களாக தீவிர விவாதம் நடக்கிறது.

    இந்த நிலையில் அன்றும், இன்றும், என்றுமே ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் ஒட்டி இருக்கும் சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் நகரின் முக்கிய இடங்களில் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.

    அதில் "உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது, அன்றும் இன்றும் என்றுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான், அண்ணாத்த குரூப்ஸ்-திண்டுக்கல் மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ள னம்பட்டி, நாககோனனூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி தட்டாரப்பட்டி, அய்ய ம்பாளையம், ஆண்டிய கவுண்டனூர், நொச்சி ப்பட்டி, விராலிப்பட்டி புதுப்பட்டி, தெத்துப்பட்டி, நவாமரத்துப்பட்டி,

    நடுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    ×