search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கஜ பூஜை
    X

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கஜ பூஜை

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த 18-ந்தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று திருஆவினன்குடி கோவில் திருப்புகழ் மண்டபத்தில் வேழ வழிபாடு, ஆனிறைவழிபாடு, ஏழுபரி வழிபாடு, நறும்புகை விளக்க படையல், திருவொளி வழிபாடு நடைபெற்றது.

    பழனி மலைக்கோவிலில் தேவஸ்தான 64 மிராசு பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் அடைதல், பேரொளி வழிபாடு, திருநீறு, திருவமுது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோவில் யானை கஸ்தூரி உள்பட 2 யானைகளுக்கு கஜ பூஜையும், 7 குதிரைகளுக்கும், பசுமாடுகளுக்கு கோபூஜையும் செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றுமாலை திருமகள் திருவழிபாடு, 16 திருக்குடங்களில் திருமகளை பூஜித்தல், 16 வித வேள்வி, 16 கன்னியர், 16 மங்கள வழிபாடு நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து பழனிகிரி வீதி, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி நகராட்சி, தேவஸ்தானம், வருவாய்த்துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சப்-கலெக்டர் தலைமையில் நடந்த இந்த பணியில் போலீசார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×