search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒட்டன்சத்திரத்தில் 75 ஆண்டு பழமையான கோவில்கள், பள்ளிவாசல் இடிப்பு

    • 75 ஆண்டுகள் பழமையான இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
    • பழமையான வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டை முதல் அரசபிள்ளைபட்டி வரை ரூ.87.50 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் ரெயில் நிலையம் அருகே கோவில்கள், மசூதி உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் இருந்தன.

    75 ஆண்டுகள் பழமையான இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. வழிபாட்டுத்தலங்களை அகற்றுவது தொடர்பாக இந்து, முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இப்பகுதியில் அமைந்த பழமையான காவடியப்ப சுவாமி கோவில், தன்னாசியப்பன் கோவில், 2 விநாயகர் கோவில், டவுன் பள்ளிவாசல் ஆகியவற்றை இடிக்க நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பாபுராமன், ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி, டி.எஸ்.பி. முருகேசன், முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    பழமையான வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×