என் மலர்
திண்டுக்கல்
- வீட்டின் முகப்பு ஓட்டில் பாம்பு ஒன்று தெரிவதை கண்ட நம்பிராஜன் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
- தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி வீட்டில் இருந்த 6 கொம்பேறி மூக்கன் பாம்புகளை பிடித்தனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி அம்பாத்துறை ஊராட்சி காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன். ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலரான இவர் ஓடுகள் வேயப்பட்ட வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டின் முகப்பு ஓட்டில் பாம்பு ஒன்று தெரிவதை கண்ட நம்பிராஜன் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து நிலைய அலுவலர் புனித் ராஜ் மற்றும் முதன்மை தீயணைப்பு வீரர்களான அழகேசன், சோலைராஜ் மற்றும் பரத் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து ஓடுகளுக்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.
பின்னர் அருகிலேயே மற்றொரு பாம்பும் இருந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக வீடு முழுவதும் ஓடுகளுடைய விரிசல்களில் ஆங்காங்கே பாம்புகள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி வீட்டில் இருந்த 6 கொம்பேறி மூக்கன் பாம்புகளை பிடித்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்தவர்களும், அப்பகுதி பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.
- சில தினங்களாக குடியிருப்பு பகுதிகளில் காட்டெ ருமைகள் முகாமிடுவதும், நகர் பகுதிகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
- வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் உலா வருவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடியிருப்பு பகுதிகளில் காட்டெ ருமைகள் முகாமிடுவதும், நகர் பகுதிகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
மேலும் விவசாய நிலங்க ளில் காட்டெரு மைகள் புகுந்து விவசாய நிலங்களை யும், பயிர்களையும் சேத ப்படுத்து வதுடன் விவசாயிகளையும் தாக்கி வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக அதிக மக்கள் கூடும் இடங்களான அண்ணாசாலை, பஸ் நிலையம், ஏழுரோடு சந்திப்பு உள்ளிட்ட இட ங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்ட மாக உலா வந்ததால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப்பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அச்சத்துடன் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறை யினர் சுமார் 1 மணி நேரமாக போராடி காட்டெ ருமைகளை வனப்பகுதி க்குள் விரட்டிச் சென்றனர். கடந்த சில தினங்களாக பொதுமக்களையும், கால்ந டைகளையும் காட்டெரு மைகள் தாக்கி வருகின்றன.
எனவே வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் உலா வருவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். காட்டெருமைகள் நகர்பகுதி க்குள் வருவதை கண்கா ணிக்க கூடுதலாக வனப்ப ணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது.
- யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் 60 வயதான சரஸ்வதி என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். இந்த யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது. இதற்கு மகுடீஸ்வரன் உரிய சிகிச்சை அளிக்காமல் இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் விலங்குகள் நலவாரியத்திற்கு புகார்கள் அளித்தனர்.
இதனையடுத்து மதுரையில் இருந்து வந்த தேசிய விலங்குகள் நலவாரிய அலுவலர் முருகேஸ்வரி, விலங்குகள் வதைதடுப்பு கண்காணிப்பாளர் அண்ணாவிநாதன் கொண்ட குழுவினர் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர்.
மேலும் யானையை முறையாக பராமரிக்க வேண்டும். சத்தான உணவு வழங்க வேண்டும். யானையை வீதியில் நடக்க வைத்தும், ஆசி வழங்க வைத்தும் பணம் வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகளை மகுடீஸ்வரனுக்கு அவர்கள் வழங்கினர். இந்த விசாரணை அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய விலங்குகள் நலவாரியத்திற்கு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
நிலக்கோட்டை:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது தலைமையின் கீழ் ஏராளமான நிர்வாகிகள் சேர்ந்து வருகின்றனர். தற்போது அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே வார்த்தை யுத்தம் எடுத்துள்ள நிலையில் சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்! அ.தி.மு.க. தோல்வியடைய காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு. சமத்துவ பேரியக்கத்தை சமுதாய கட்சியாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேறு என்ற வகையில் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. இவண் நிலக்கோட்டை அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் என்று எழுதப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.வான தேன்மொழி சேகர் உள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நடந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலின்போது இவர் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அவரே மீண்டும் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நிலக்கோட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 4வது குறுக்கு த்தெருவை சேர்ந்தவர் மனோஜ் (22). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது 2 பேர் அவரை தனியாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மறைவான இடத்தில் நின்று கொண்டி ருந்த 2 பேர் மனோஜை பட்டாக்கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மனோஜ் உயிருக்கு பயந்து கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மனோஜை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சி கிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறி த்து தாடிக்கொம்பு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசா ரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் மனோஜ் அரிவாளால் வெட்ட ப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,
திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த தேவா என்ற திவாகர் (22) என்பவர் ஜோதிபாசு மனைவி உத்ரா (27) என்பவருடன் பழகி வந்துள்ளார். பால் வியாபாரம் செய்துவரும் ஏற்கனவே மனோஜ்டன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். திவாகர் பழகுவதை அறிந்ததும் அவர் கண்டித்துள்ளார். இதனால் மனோஜ் மற்றும் தேவாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த தகராறில் தான் மனோஜ் அரிவாளால் வெட்டப்பட்டது உறுதி யானது. இதை தொடர்ந்து தேவா மற்றும் மேற்கு அசோக்நகரை சேர்ந்த ஜான் என்ற ஜானகிரமன் (22), அஜய் (20), உத்ரா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் இன்று பழனி கோவிலுக்கு வந்தார்.
- அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன், காமெடி நடிகர் சந்தானம் உள்பட ஏராளமானோர் தொடர்ந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
அதன் வரிசையில் இன்று நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் பழனி கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தும் அவர்கள் வழிபட்டனர். பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதன்பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர்.
- செம்பட்டி அருகே 15-க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்ததில் காயமடைந்தனர்
- வெறி நாயை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியில் வெறி நாய் தெருவுக்குள் நடமாடி யது. எஸ்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமாயி (வயது60), கருப்பாயி (53), இந்திரா (60), சிறுமி ஹன்சிகாஸ்ரீ (7), பிரியா (28), இந்திராணி (48), ராஜாத்தி (60), சஞ்சய், ராஜேஷ் உள்பட 15-க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்ததில் காயமடைந்தனர்.
அவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் படுகாயம் அடைந்த ராமாயி திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் வெறி நாய் கடித்ததில் சாமிதேவர் என்பவருடைய 2 ஆடுகள் பலியானது. ஐயப்பன் என்பவர் மாடு வெறிநாய் கடித்ததில் ஆபத்தான நிலையில் உள்ளது.
கோழிகள், குட்டி நாய்கள் என வெறி நாய் கண்ணில் தென்பட்டது அனைத்தையும் கடித்து வருவதால் கிராம பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் வெறிநாய் தொல்லை இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் படிக்கும் 2 அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் கேட்டை மூடி, குழந்தைகளை பாது காப்பாக வைத்துள்ளனர்.
தொடர்ந்து பீதி அடைந்து வருவதால் வெறி நாயை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன.
- பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடியே பயணம் செய்யலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக வனத்துறை சோதனைச்சாவடியில் முன்அனுமதி டிக்கெட் பெற வேண்டும்.
இதனையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுத்து வருகின்றனர். காட்டு யானை, காட்டுஎருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்வதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரிக்குள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது சாரல்மழை பெய்தாலும் வறண்ட நிலையே நிலவுகிறது. இதனால் அடிக்கடி காட்டுத்தீ பற்றி வருகிறது.
இதனை அணைக்கும் முயற்சியிலும் தீ தடுப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். வனவிலங்குகள் இடம்பெயரும்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். தற்போது பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது. எனவே அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
- இன்று கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
பழனியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 21-ந்தேதி கம்பம் சாட்டுதலும், 28-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணி அளவில் அம்மன் தேரேற்றம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து 4.30 மணி அளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்று, தேரோட்டம் தொடங்கியது.
பழனி நகரின் நான்கு ரத வீதியில் தேர் சுற்றி வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஓம் சக்தி, பராசக்தி... மாரியம்மா தாயே என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் தேர் நிலையை அடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், பழனி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், புஷ்பலதா கார்த்திகேயன், சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
- சோலை மந்திகள் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் மட்டும் வாழக்கூ டிய இயல்பை கொண்டவை.
- சோலை மந்திகளும் சோலை மர விதைகளை அதிக அளவில் பரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதி கடந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இருந்து 2 ஆண்டுகள் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பயணிகள் பார்வையிட அனுமதியளி க்கப்பட்டது. இந்த 2 ஆண்டுகள் மனித நட மாட்டம் இல்லாமல் இருந்த இவ்வனப்பகுதிக்குள் முன்பு இருந்ததை விட சோலை மந்திகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
பாலூட்டி இனங்களில் முதன்மை இனமாக ஆய்வாளர்களால் கருத ப்படும் சோலை மந்திகள் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் மட்டும் வாழக்கூ டிய இயல்பை கொண்டவை. மேலும் இவைகள் சோலை மரங்களின் விதைகளை வனம் முழுவதும் பரப்புவ தற்கு பெரும்பங்கு ஆற்றுவ தால் இந்த இனங்களை காப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பேரிஜம் வனப்பகுதிக்குள், அந்திய சவுக்கு மரங்களை அகற்றி, சோலை மரங்களை நடவு செய்யும் பணிகள் வனத்து றையால் தொடங்கப்ப ட்டுள்ள நிலையில் அதிகரி த்துள்ள சோலை மந்திகளும் சோலை மர விதைகளை அதிக அளவில் பரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா, மேல்நிலைத் தொட்டி திறப்புவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- பள்ளியில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததைப்பார்த்து பள்ளி ஆசிரியர்களை அழைத்து அமைச்சர் கண்டித்தார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா, மேல்நிலைத் தொட்டி திறப்புவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அமைச்சர் அர.சக்கரபாணி பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக் கட்டிடங்கள், மைதானம் உள்ளிட்டவை முறையாக பராமரிக்காமலும், சேதடைந்தும் காணப்பட்டது.
மேலும் பள்ளியில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததைப்பார்த்து பள்ளி ஆசிரியர்களை அழைத்து அமைச்சர் கண்டித்தார். ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். அப்போதுதான் அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் வந்து சேருவார்கள். மேலும் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியடைய வேண்டும்.
மைதானம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிந்தலவாடம்பட்டியை சேர்ந்த விவசாயி தண்டபாணி (வயது 55) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யானை தாக்கி உயிரிழந்தார். அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் அர.சக்கரபாணி உயிரிழந்த தண்டபாணியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான உதவியை வழங்கினார்.
- நத்தம் மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
- மேலும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்னை செய்தனர்.
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 20ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர்.
அன்றிரவு அம்மன் குளத்தி லிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவி லில் ஸ்தாபிதம் செய்ய ப்பட்டது.
தொடர்ந்து மாரியம்ம னுக்கு மஞ்சள் திருப்பா வாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினர்.அன்று அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.நேற்று அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், மாறுவேடமணிந்து வருவது மற்றும் பறவை காவடிகள், போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.
மேலும் மேளதாளம் முழங்க தாம்பாளத்தில் அம்மனுக்காக அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோவில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது.
பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழியில் பூசாரிகள் இறங்கிய பின்னர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக இறங்கினர்.
முன்னதாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கரும்புதொட்டில்கள் எடுத்தல், அங்கப்பிரத ட்சணம் செய்தல், மாவி ளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்றவைகளும், பூக்குழியில் போடுவதற்காக விறகு கட்டைகளையும், உப்பு, மிளகு பொட்டலங்க ளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
நேற்று இரவு கோவிலி லிருந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இன்று புதன் கிழமை காலையில் மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அலங்கரி க்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்படும்.






