என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலை மந்திகள் அதிகரிப்பு"

    • சோலை மந்திகள் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் மட்டும் வாழக்கூ டிய இயல்பை கொண்டவை.
    • சோலை மந்திகளும் சோலை மர விதைகளை அதிக அளவில் பரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதி கடந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இருந்து 2 ஆண்டுகள் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பயணிகள் பார்வையிட அனுமதியளி க்கப்பட்டது. இந்த 2 ஆண்டுகள் மனித நட மாட்டம் இல்லாமல் இருந்த இவ்வனப்பகுதிக்குள் முன்பு இருந்ததை விட சோலை மந்திகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.

    பாலூட்டி இனங்களில் முதன்மை இனமாக ஆய்வாளர்களால் கருத ப்படும் சோலை மந்திகள் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் மட்டும் வாழக்கூ டிய இயல்பை கொண்டவை. மேலும் இவைகள் சோலை மரங்களின் விதைகளை வனம் முழுவதும் பரப்புவ தற்கு பெரும்பங்கு ஆற்றுவ தால் இந்த இனங்களை காப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே பேரிஜம் வனப்பகுதிக்குள், அந்திய சவுக்கு மரங்களை அகற்றி, சோலை மரங்களை நடவு செய்யும் பணிகள் வனத்து றையால் தொடங்கப்ப ட்டுள்ள நிலையில் அதிகரி த்துள்ள சோலை மந்திகளும் சோலை மர விதைகளை அதிக அளவில் பரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×