திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு பெண் உள்பட 4 பேர் கைது

கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 4வது குறுக்கு த்தெருவை சேர்ந்தவர் மனோஜ் (22). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது 2 பேர் அவரை தனியாக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மறைவான இடத்தில் நின்று கொண்டி ருந்த 2 பேர் மனோஜை பட்டாக்கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மனோஜ் உயிருக்கு பயந்து கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மனோஜை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சி கிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறி த்து தாடிக்கொம்பு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசா ரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் மனோஜ் அரிவாளால் வெட்ட ப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த தேவா என்ற திவாகர் (22) என்பவர் ஜோதிபாசு மனைவி உத்ரா (27) என்பவருடன் பழகி வந்துள்ளார். பால் வியாபாரம் செய்துவரும் ஏற்கனவே மனோஜ்டன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். திவாகர் பழகுவதை அறிந்ததும் அவர் கண்டித்துள்ளார். இதனால் மனோஜ் மற்றும் தேவாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த தகராறில் தான் மனோஜ் அரிவாளால் வெட்டப்பட்டது உறுதி யானது. இதை தொடர்ந்து தேவா மற்றும் மேற்கு அசோக்நகரை சேர்ந்த ஜான் என்ற ஜானகிரமன் (22), அஜய் (20), உத்ரா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com