என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    இந்த மலைப்பாதை யில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளியில் இருந்து சோலைக்காடு வரையிலான மலைப்பாதை யில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது புல்லா வெளி-சோலைக்காடு இடையே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த சாலையில் சில இடங்களில் இன்னும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட வில்லை. இந்த சாலையோரம் 200 அடி அபாய பள்ள த்தாக்கு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த மலைப்பாதை யில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 25 பேருடன் வந்த பஸ் பழுதாகி நின்ற லாரியை கவனிக்காமல் அதன்மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னிவாடி:

    ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு பாலி அலுமினிய குளோரைடு என்ற ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் தேவராஜ் என்பவர் ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல்-பழனி சாலை கன்னிவாடி அருகே தெத்துப்பட்டி புதுப்பாலம் அருகே வந்தபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனையடுத்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அப்பகுதியில் ஏதேனும் பழுது நீக்கும் கடை உள்ளதா என விசாரித்து கொண்டிருந்தார்.

    அப்போது கோவையில் இருந்து தேனிக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரராஜபெருமாள்(34) என்பவர் ஓட்டிவந்தார். வேல்முருகன் என்பவர் கண்டக்டராக இருந்தார். சுமார் 25 பேருடன் வந்த பஸ் பழுதாகி நின்ற லாரியை கவனிக்காமல் அதன்மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அரசு பஸ்சின் பக்கவாட்டு பகுதி முற்றிலும் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறிஅடித்து கூச்சலிட்டனர்.

    இதனைபார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கன்னிவாடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் கன்னிவாடி இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் விபத்தில் டிரைவர் சீட்டின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கோவை மாவட்டம் சோமையனூர் தனுவாய் பகுதியை சேர்ந்த அய்யப்பன்(40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் விஷாலினி(14), ராஜபாளையத்தை சேர்ந்த மகாலட்சுமி(23), உத்தமபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்(30), திருப்பூரை சேர்ந்த சுவேதா(25) உள்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்து நடந்த இடத்தில் ஸ்பிரிட் ஏற்றி வந்த லாரியில் இருந்து பாலி அலுமினிய குளோரைடு சாலையில் ஆறுபோல் ஓடியது. ஒருவித நெடியுடன் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருந்ததால் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சிறிதுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சீரானது.

    இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் வேலை என குடும்ப தலைவிகளை குறி வைத்து மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    • இளம்பெண் ஒருவர் ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் வரை இந்த மோசடி கும்பலால் பணத்தை இழந்துள்ளார்.

    குள்ளனம்பட்டி:

    ஆன்லைனில் வேலை தேடும் கல்லூரி மாணவிகள் மற்றும் படித்த குடும்ப தலைவிகளை குறி வைத்து மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி விட்டது. படித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி த்தகுதியின் அடிப்படையில் வேலைகள் கிடைப்ப தில்லை. இதனால் இளை ஞர்கள் கிடைத்த வேலையை செய்ய வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விடுகின்றனர். சிலர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சில மோசமான இணைய செயலிகள் மூலம் ஏமாற்றம் அடைகின்றனர்.

    தமிழகத்தில் ஏராளமான மக்கள் வேலை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களை குறி வைத்து பல டிஜிட்டல் தளங்கள் பண மோசடியில் ஈடுபடுகிறது. வேலையில்லா நபர்கள் வேலை பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் முழு விபரங்களையும் கொடுக்கின்றனர்.

    இதை வைத்து மோசடி செய்யும் நபர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை குறிவைத்து வேலை தேடும் நபர்களின் தொலைபேசி எண்களை கைப்பற்றி அதன் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை பெற்று மோசடி செய்து விடுகின்றனர்.

    மோசடி நபர்கள் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். ரூ.100 முதலீடு செய்தால் ரூ.300 லாபம் பெறலாம். ரூ.300 முதலீடு செய்தால் ரூ.500 லாபம் பெறலாம். ரூ.500 முதலீடு செய்தால் ரூ.1000 வரை லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர்.

    மேலும் சில பிரபலமான தனியார் நிறுவனங்களின் பெயர்களை கூறி ஏமாற்றுகின்றனர். மேலும் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாவும் கூறி பண மோசடியில் ஈடுபடுகின்ற னர்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மீனா கூறியதாவது;-

    ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் கும்பல் மீது சமீப காலத்தில் 30 புகார்கள் வந்துள்ளது. நேற்று முன்தினம் முத்தன ம்பட்டியை சேர்ந்த கல்லூரி இளம்பெண் ஒருவர் ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் வரை இந்த மோசடி கும்பலால் பணத்தை இழந்துள்ளார்.

    வேலை தரும் பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிப்பது இல்லை. ஒருவர் வேலை வாங்கி தருவதாக உங்களை தொடர்பு கொண்டால் முதலில் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அவர்கள் கூறும் நிறுவனங்களில் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    குறுகிய காலத்தில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். தெரியாத யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • குற்றவியல் வழக்குகளில் டி.என்.ஏ ஆய்வு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து மாணவிகளுக்கு விஞ்ஞானி கஸ்பைக்கர் எடுத்துரைத்தார்.
    • டி.என்.ஏ ஆய்வின் முக்கியத்துவம், ஆய்வில் கண்டறிப்பட்ட உண்மைகள், சிக்கலான வழக்குகளில் இவை எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து எடுத்துரைத்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வான்இயற்பியல் ஆய்வகம் உள்ளது. இங்கு குற்றவியல் வழக்குகளில் டி.என்.ஏ ஆய்வு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து மாணவிகளுக்கு விஞ்ஞானி கஸ்பைக்கர் எடுத்துரை த்தார்.

    மேலும் மாணவி களின் சந்தேகங்க ளுக்கும் விளக்கம் அளித்தார். டி.என்.ஏ ஆய்வின் முக்கியத்துவம், ஆய்வில் கண்டறிப்பட்ட உண்மைகள், சிக்கலான வழக்குகளில் இவை எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து சுவார ஸ்யமாக எடுத்துரைத்தார். மனிதனின் எல்லா பாகத்திலும் டி.என்.ஏ உள்ளது.

    நகம், கண், கை, கால்கள் உள்ளிட்ட பாகங்களிலும் டி.என்.ஏ உள்ளது. இதனை வைத்தும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை எளிதில் கண்டறியலாம் என தெரிவித்தார். 148 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் ஒவ்வொரு வரின் டி.என்.ஏவையும் சேமித்து வைப்பது கடினம்.

    பிற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றம் அடைந்தால் இதுபோன்ற சேமிப்பு சாத்தியமாகும். இதன் ஆராய்ச்சி பணிகள் தற்போது வளர்ந்த நாடு களில் நடைபெற்று வருகி றது. எனவே இதுகுறித்து ஆராய்ச்சி படிப்புகளில் மாணவிகள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றார். இந்நி கழ்ச்சியில் வான்இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபினேசர் மற்றும் ஆய்வக பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கஸ்தூரி யானை பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • இயற்கையான சூழலில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு ள்ளதால் யானை உற்சாக மாக குளியல் போடுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் யானை கஸ்தூரி (வயது 57). இந்த யானை பெரியநாயகி அம்மன் கோவில் வளா கத்தில் வைத்து பராமரிக்க ப்பட்டு வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா, கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்களின் போது கஸ்தூரி யானை அலங்காரம் செய்யப்பட்டு பங்கேற்று வருகிறது.

    யானைகள் சோர்வடை யாமல் இருக்க வருடத்துக்கு ஒரு முறை புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி பல்வேறு நட வடிக்கைகள் யானைகளை உற்சாகபடுத்தும் வண்ணம் நடைபெற்று வருகிறது.

    பழனி அருகே காரமடை பகுதியில் உள்ள தோட்ட த்தில் சில ஆண்டுகளுக்கு முன் கோவில் சார்பில் யானைக்கு நீச்சல் குளம் கட்டப்பட்டது. தினமும் காலையில் ஷவர் மற்றும் மாலையில் குளத்தில் குளிக்க வைக்கப்படுகிறது. இயற்கையான சூழலில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு ள்ளதால் யானை உற்சாக மாக குளியல் போடுகிறது. வெயிலின் தாக்கம் அதிக ரித்து வருவதால் அதிக நேரம் தண்ணீரில் குளிக்க யானை ஆர்வம் காட்டி வருகிறது.

    • சிந்தலவாடம்பட்டி, கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சனநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரி வித்துள்ளார்.

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி நடைபெறுவதால் கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னைய கவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தோவத்தூர், கே.டி.பாளையம், ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செய்ற்பொறியாளர் சந்தனமுத்தையா தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் தனியார் துறைகளில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
    • சட்டமன்ற கடைசி நாளில் அவசர அவசரமாக 15 சட்டமசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம்கூறியதாவது,

    தமிழக அமைச்சரை பொருத்தவரை மதுபான விற்பனையை வைத்துதான் தமிழக வளர்ச்சி என்கிறார். எங்களை பொறுத்தவரை தமிழகத்துக்கு அது அவமானம். தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் முதல் நாள் முதல் கையெழுத்து மது கடையை மூடுவோம் என்றார்கள். மூடினார்களா? தமிழ்நா ட்டில் 3 கோடி பட்டதாரி இளைஞர்களுக்கு மேல் வேலை இல்லை. தமிழகத்தை எங்களிடம் 5 ஆண்டுகள் மட்டும் கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு இழுத்து செல்ல எனக்கு போதிய அனுபவம் உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க.வால் புதிதாக எதையும் கொடுக்க முடியாது.

    தற்போது தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு அரசாணை வெளியிட்டார்கள். அதில் திருமண மண்டபங்கள், சர்வதேச மாநாடுகள், விளையாட்டு மைதானங்களில் மதுவை சப்ளை செய்யலாம் என்பதுதான். சென்னையில் பெரிய மதுபான கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம், என்ன மனநிலையில் இந்த அரசாணையை கொண்டு வந்தீர்கள். அதனை எதிர்த்து பா.ம.க. வழக்கு போட்டு தடை ஆணை பெற்றது. தி.மு.க.வின் நிறுவனர் அண்ணாவின் கொள்கையே பூரண மதுவிலக்கு தான். அதன் வழியில் வந்த தி.மு.க. பூரண மது விலக்கை அமல்படுத்த தயக்கம் காட்டுவது ஏன்?

    தற்போது 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி மசோதா நிறைவேற்றி உள்ளனர். 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதை பா.ம.க.தான் முதன்முதலில் எதிர்த்தது. தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கொள்கைகளில் இதுவும் ஒன்று அதனால் கவர்னர் இதற்கு கையெழுத்திடுவார். அதனை எப்போது வேண்டுமானாலும் இந்த அரசு கொண்டு வரும்.

    தமிழ்நாட்டில் தனியார் துறைகளில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க சட்டம் இயற்ற வேண்டும். சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் 15 நாட்கள்தான் தற்போது நடத்துகின்றனர். சபாநாயகர் என்பவர் நடுநிலைமையான ஒருவராக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு 25 சதவீதம் எதிர்க்கட்சியினருக்கு 75 சதவீதமும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

    திண்டுக்கல் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும். மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு முழு ஆதரவு தருகிறோம். அதேபோல் மதம்மாறிய வன்னியர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தபின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் மாபியாவால் வி.ஏ.ஓ படுகொலை செய்யப்பட்டார். எனவே எம்சாண்ட் அதிகளவில் பயன்படுத்தினால் ஆற்று மணல் பயன்பாடு குறையும். தமிழகத்தில் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தன. ஆனால் தற்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. தமிழக அரசு நீர்மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். சட்டமன்ற கடைசி நாளில் அவசர அவசரமாக 15 சட்டமசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க சமூகநீதி குறித்து அதிகளவில் பேசி வரும் நிலையில் தனியார் நிறுவனங்களுக்கே ஆதரவாக செயல்படுகின்றனர். தென் மாவட்டத்தில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் 620 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. உலகளவில் இயற்கை சீற்றம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போலீசார் ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொடைக்கானல்:

    சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வர் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்சர்வேட்டரி வனப்பகுதியில் உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் அப்பகுதியில் விறகு எடுக்க சென்ற பெண்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெகதீஸ்வரின் பெற்றோர் கொடைக்கானலுக்கு வந்தனர். போலீசார் விசாரணையில் ஜெகதீஸ்வரின் பெற்றோர் தங்கள் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தனர். அந்த கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

    கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்ததால் ஜெகதீஸ்வர் மன வேதனையில் இருந்துள்ளார். தனக்கும் நல்ல வேலை இல்லாததால் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். எனவே யாருக்கும் தெரியாமல் கொடைக்கானலில் வந்து மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்த அவர் அப்சர்வேட்டரியில் தனது பைக்கில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆனால் அதற்குள் அங்கிருந்த பெண்கள் பார்த்து விடவே போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளார்.

    • பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்புதொட்டில் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
    • சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே உள்ள பட்டிகுளம் கிராமத்தில் யோகசக்தி விநா யகர் மாலை யம்மன் கோவில் திருவிழா கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுத லுடன் தொடங்கி யது. விழாவில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    இதைதொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்புதொட்டில் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பட்டிகுளம், இலுப்பபட்டி, கணவாய்பட்டி, சின்னஅரவக்குறிச்சி, வேலூர் ஆகிய ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பழனி மாலை நேர கல்லூரியில் பொருளாதார சுதந்திரமே பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகளின் கேள்வி களுக்கு பதில் அளித்தார்.

    திண்டுக்கல்:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பழனி மாலை நேர கல்லூரியில் பொருளாதாரசுதந்திரமே பாலினசமத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.தொலை தூரகல்வி இயக்ககம் கூடுதல் தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி சலீமாராபியத் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகளின் கேள்வி களுக்கு பதில் அளித்தார்.

    தொலை தூரகல்வி இயக்கத்தை சேர்ந்த திருவேணி காட்சிதொடர்பி யல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழா விற்கான ஏற்பாடுகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரி இயக்குனர் தயாளகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் , மாணவ-மாணவிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    நத்தம்:

    நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (27ந் தேதி) நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நத்தம்,கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • தனியார் தோட்டத்து கிணற்றில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் மாயமானவர் என்பது தெரியவந்தது.

    நத்தம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மங்கள ப்பேட்டையை சேர்ந்தவர் கோபி. (36) இவர் கடந்த 14-ம் தேதி குடும்பத்தினரு டன் மதுரை சென்று விட்டு நத்தம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டி ருந்த னர். அப்போது பரளிபுதூர்-சோதனை சாவடி அருகே வந்தபோது மாயமானார். இது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அப்பகுதி யில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடை த்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த உடலை கயிறு கட்டி மீட்டனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் மாயமான கோபி என்பது தெரியவந்தது. அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×