என் மலர்
திண்டுக்கல்
- விசேஷ நிகழ்ச்சிகளில் எவ்வளவு பெரிய மொய் பணம் கிடைத்தாலும் தாய்மாமன் சீருக்கே முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது.
- சீர்வரிசையை திண்டுக்கல்-பழனி சாலையில் மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கொண்டு வந்தனர்.
திண்டுக்கல்:
திருமணம், காதணி விழா, புனித நீராட்டு விழா உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் தாய்மாமன் சீர் கொடுப்பது என்பது தென் மாவட்டங்களில் பாரம்பரிய முறைப்படி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாகரிகம் வளர்ந்த காலத்திலும் இதுபோன்ற சீர்கொடுக்கும் முறை பழமை மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
விசேஷ நிகழ்ச்சிகளில் எவ்வளவு பெரிய மொய் பணம் கிடைத்தாலும் தாய்மாமன் சீருக்கே முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த தேனீர் கடை உரிமையாளர் ஜெயபால் தனது மகள் ரம்யாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தினார்.
தனியார் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் ரம்யாவின் தாய்மாமன் பெருமாள் மற்றும் அவரது தம்பிகள் தனது அக்கா மகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகளான பட்டுச்சேலை, தங்க நகை, பழங்கள், அரிசி மூட்டை, ஆடு, பலசரக்கு சாமான்கள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பூமாலை, கேக் வகைகள், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை 15 மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலமாக திண்டுக்கல்-பழனி சாலையில் மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கொண்டு வந்தனர்.
இதனை திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர்களும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். தாய்மாமன்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை கொடுத்து சீர்வரிசையை ரம்யாவின் பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- தனது நண்பருடன் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரை மறித்து நகை பறிக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர்கள் என தெரிய வந்தது.
பழனி:
பழனி 1-வது வார்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் சாலமன் (வயது21). இவர் தனது நண்பர் மாரி முத்துவுடன் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் திடீரென 10-க்கும் மேற்பட்ட வாலி பர்கள் பயங்கர ஆயுதங்க ளுடன் இருவரையும் தாக்கினர். மேலும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடினர்.
இதை பார்த்ததும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாரிமுத்து, சாலமன் ஆகியோரை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரை மறித்து நகை பறிக்க முயன்ற வழக்கில் மாரிமுத்து மற்றும் சாலமன் ஆகியோர் கைதாகி சிறைக்கு சென்றவர்கள் என தெரிய வந்தது. எனவே அதில் ஏற்பட்ட முன்வி ரோதம் காரணமாக வாலிபர்கள் தாக்கப்பட்டிரு க்கலாம். மேலும் தாக்குதல் நடத்திய கும்பலை போலீ சார் தேடி வருகின்றனர்.
- வேன் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து பழுதானது.
- விபத்தை ஏற்படுத்திய முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து காலிபிளவர் ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேனில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை கிருஷ்ணகிரியை சேர்ந்த சங்கர் (வயது26) என்பவர் ஓட்டி வந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த தர்ஷன் (20). கோவிந்தசாமி (18) ஆகியோரும் வந்தனர்.
வேன் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து பழுதானது. உடனடியாக டிரைவர் மற்றும் தர்ஷன் ஆகியோர் பழுதான டயரை அகற்றி விட்டு வேறு டயர் மாற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கோவிந்தசாமி தனது செல்போன் மூலம் டார்ச் அடித்து பின்னால் வந்த வாகனங்களை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். கோவிந்தசாமி வாகனங்களை திருப்பி விட்டுக்கொண்டிருந்த போது அதை கவனிக்காமல் மின்னல் வேகத்தில் வந்த லாரி பழுதாகி நின்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனுக்கு அடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சங்கர் மற்றும் தர்ஷன் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இது குறித்து கூம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அந்த வாகனங்களை நெடுஞ்சாலை ரோந்து பணியினர் அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.
- 20 ரகங்களில் நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் சால்வியா, டெலிபினியம், கேலண்டுல்லா, பாபிஸ் போன்ற மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது.
- பூக்களை கண்டு சுற்றுலா பயணிகளும் மெய்சிலிர்க்கின்றனர்
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறையை சிறப்பிக்கும் விதமாக வருடம் தோறும் கொடைக்கானலில் கோடை விழா மலர்கண்காட்சியுடன் துவங்கி நடைபெறும்.. மலர் கண்காட்சியை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.60வது மலர்க்கண்காட்சிக்கு தயாராகும் விதத்தில் தற்போது மலர்கள் பூக்கத் துவங்கி உள்ளன.
3 நடவுகளாக நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடவு செய்யப்பட்டு 2.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக 20 ரகங்களில் நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் சால்வியா, டெலிபினியம், கேலண்டுல்லா, பாபிஸ் போன்ற மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது.
மனதை மயக்கும் மலர்கள் தற்போது பூக்க துவங்கியுள்ளதால் பூக்களை கண்டு சுற்றுலா பயணிகளும் மெய்சிலிர்க்கி ன்றனர்.மேலும் நடவு செய்யப்பட்டு ள்ள பல லட்சம் மலர் நாற்றுகளும் வரும் வாரங்களில் பூத்துக் குலுங்கும் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
- அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார்.
- புதூர் பகுதியை சேர்ந்த வியாபாரி தனது மனைவியை கடத்திச்சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பஞ்சம்தா ங்கி காக்காயம்பட்டியை சேர்ந்தவர் செவத்த முத்து(25). கூலித்தொழி லாளி. இவர் தனது உறவி னரான முத்துவிஜயா(19) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த முத்துவிஜயா திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர். செவத்தமுத்து அளித்தபுகாரில் புதூர் பகுதியை சேர்ந்த வியாபாரி பாண்டி என்பவர் தனது மனைவியை கடத்திச்சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம் விசாரிக்க சென்றபோது போலீஸ்நிலையத்திற்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் வரவில்லை. எனவே மனைவியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
- வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- கொடைக்கானலுக்கு நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கொடைக்கானல்:
கொடைக்கானலுக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நேற்றுஇரவு கொடைக்கானலுக்கு சென்ற அரசு பஸ் நடுவழியிலேயே பழுதாகி நின்றது. இதனால் மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எனவே தரமற்ற பஸ்களை நிறுத்திவிட்டு கொடைக்கானலுக்கு நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 24 மணிநேரமும் செயல்படும் இந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர்
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தடையின்றி சிகிச்சை வழங்க வேண்டும்
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். தினசரி வெளிநோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் இங்கு பரிசோதனைக்கு வருகின்றனர்.
24 மணிநேரமும் செயல்படும் இந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். மேலும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களிடம் நர்சுகள் அலட்சியமாகவே நடந்து கொள்கின்றனர். இங்கு பிரசவத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளநிலையில் ஊழியர்களின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் நோயாளிகளின் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இங்குள்ள மருத்துவ பணியாளர்கள் வெளிநோயாளிகளாக வருபவர்களை நீண்டநேரம் காத்திருக்க வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தடையின்றி சிகிச்சை வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையோடு வகுப்புகள் முடிந்த நிலையில் பல்வேறு மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
- கேரள மாநிலம் மூணாறு, தேக்கடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் விடப்பட்டது.
அரசு பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையோடு வகுப்புகள் முடிந்த நிலையில் பல்வேறு மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதியது.
இதே போல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் விடுமுறையை கொண்டாடினர். தற்போது காலை முதலே கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணமும், மதிய நேரத்தில் சாரல் மழையும் பெய்து வருகிறது. மலை முகடுகளை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதே போல் கேரள மாநிலம் மூணாறு, தேக்கடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இங்கும் சாரல் மழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் மலை ஸ்தலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரம் அணி வகுத்து நின்ற வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் போராடினர்.
எனவே மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்
- கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும்.
நத்தம்:
நத்தம் தாலுகா சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டி கேசரி கண்மாயில் மழைவளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆண்டுதோறும் மழை காலத்தில் கேசரி கண்மாயில் நீர் சேகரிக்கின்றனர். கண்மாயில் நிறைந்த நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். கோடையில் நீர் வற்றும் போது மீன்பிடி திருவிழா நடைபெறுகிறது.
சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காலை முதலே கண்மாயில் பொதுமக்கள் குவிந்தனர். முதற்கட்டமாக வெளியூர், உள்ளூர் நபர்களுக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். விரால், ஜிலேபி கெண்டை ஆகிய மீன்களை பிடித்தனர்.
கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும். இதையடுத்து கட்டணம் இன்றி கிராமத்தினர் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் தங்களிடம் உள்ள வலை, பரி, கச்சா, கூடை, கொசுவலை, சேலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடிக்கும் முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
முடிவில் தங்களுக்கு கிடைத்த மீன்களை பலருடன் பகிர்ந்து கொண்டன்ர். இதனால் பக்கத்து கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் மீன் குழம்பு மனம் கமகமத்தது. இதன் மூலம் கிடைத்த வருவாயை கிராமத்தில் பொது தேவைக்கு பயன்படுத்து கின்றனர்.
- அவரிடம் இருந்த செல்போனை பறித்து பணம் கேட்டு, தர மறுக்கவே கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓட முயன்றனர்.
- பொதுமக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
பழனி:
மதுரையை சேர்ந்தவர் அழகுமலைகண்ணன். இவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றார். மலைக்கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் மதுரைக்கு செல்வதற்காக பழனி பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அழகுமலை கண்ணனை மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து பணம் கேட்டனர். அவர் தர மறுக்கவே கத்தியை எடுத்து அழகுமலைகண்ணனின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் அவர் சத்தம் போட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பழனி நகர் போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கோதைமங்கல த்தை சேர்ந்த மாசானம் (வயது32), பாண்டியன் (35) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்து வேறு ஏதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ள்ளனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயம் அடைந்த அழகுமலைகண்ணனை சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து ள்ளனர்.
- குடியிருப்புக்கு அருகே தொழிற்சாலை இருப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் முதியவர்கள், சிறுவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
- இ.பெரிய சாமியை நேரில் சந்தித்து முறைகேடாக செயல்படும் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை ஆர்.ஆர். நகரில் தனியாருக்கு சொந்தமான ஏலக்காய் பதப்படுத்தும் தொழி ற்சாலை உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொழிற் சாலையால் ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் மலைகிராம மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர்.
இதுதவிர ஏலக்காய் பதப்படுத்தும் தொழி ற்சாலையில் 18 மணி நேரம் ஓடக்கூடிய ஜென ரேட்டர் இரைச்சலால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பலவித நோய்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும் குடியிருப்புக்கு அருகே தொழிற்சாலை இருப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் முதிய வர்கள், சிறுவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதுதவிர தொழி ற்சாலையிலிருந்து வெளி யேறும் கழிவுநீரால் விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்ப ட்டன. எனவே கடந்த 2 வருடமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த பொது மக்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரிய சாமியை நேரில் சந்தித்து முறைகேடாக செயல்படும் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அமை ச்சர் இ.பெரியசாமி சம்மந்த ப்பட்ட துறை அதிகாரி களிடம் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார். உடனடி யாக ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததோடு 3 வருடங்களாக முறைகேடாக தொழி ற்சாலை செயல்படுத்தி வருவது குறித்தும் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரி வித்துள்ளனர்.
நத்தம்:
நத்தம் அருகே புதுப்பட்டி சடையம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.






