என் மலர்
நீங்கள் தேடியது "60th Flower Show"
- கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
- இதற்காக 1200-மலர் படுகைகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வருகிற மே மாதம் 60-வது மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இதற்காக பிரையண்ட் பூங்காவில் முதற்கட்டமாக மலர் நாற்று சாகுபடி தொடங்கியது. எதிர்வரும் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் நாற்றுகள் நடும் பணியும் தொடங்கி உள்ளது.
இதற்காக 1200-மலர் படுகைகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. சால்வியா, டெல்பீனியம்,பிங்க் ஆஸ்டர், வெள்ளை ஆஸ்டர், ஆர் நித்தோகேலம்,பெல் பெர்சியா, லில்லியம், டேலியா போன்ற மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில்கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள் சாமி,பூங்கா மேலாளர் சிவபாலன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- 20 ரகங்களில் நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் சால்வியா, டெலிபினியம், கேலண்டுல்லா, பாபிஸ் போன்ற மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது.
- பூக்களை கண்டு சுற்றுலா பயணிகளும் மெய்சிலிர்க்கின்றனர்
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறையை சிறப்பிக்கும் விதமாக வருடம் தோறும் கொடைக்கானலில் கோடை விழா மலர்கண்காட்சியுடன் துவங்கி நடைபெறும்.. மலர் கண்காட்சியை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.60வது மலர்க்கண்காட்சிக்கு தயாராகும் விதத்தில் தற்போது மலர்கள் பூக்கத் துவங்கி உள்ளன.
3 நடவுகளாக நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடவு செய்யப்பட்டு 2.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக 20 ரகங்களில் நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் சால்வியா, டெலிபினியம், கேலண்டுல்லா, பாபிஸ் போன்ற மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது.
மனதை மயக்கும் மலர்கள் தற்போது பூக்க துவங்கியுள்ளதால் பூக்களை கண்டு சுற்றுலா பயணிகளும் மெய்சிலிர்க்கி ன்றனர்.மேலும் நடவு செய்யப்பட்டு ள்ள பல லட்சம் மலர் நாற்றுகளும் வரும் வாரங்களில் பூத்துக் குலுங்கும் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.






