என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "60-வது மலர்கண்காட்சி"

    • 20 ரகங்களில் நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் சால்வியா, டெலிபினியம், கேலண்டுல்லா, பாபிஸ் போன்ற மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது.
    • பூக்களை கண்டு சுற்றுலா பயணிகளும் மெய்சிலிர்க்கின்றனர்

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறையை சிறப்பிக்கும் விதமாக வருடம் தோறும் கொடைக்கானலில் கோடை விழா மலர்கண்காட்சியுடன் துவங்கி நடைபெறும்.. மலர் கண்காட்சியை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.60வது மலர்க்கண்காட்சிக்கு தயாராகும் விதத்தில் தற்போது மலர்கள் பூக்கத் துவங்கி உள்ளன.

    3 நடவுகளாக நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடவு செய்யப்பட்டு 2.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக 20 ரகங்களில் நடவு செய்யப்பட்ட இந்த மலர்கள் சால்வியா, டெலிபினியம், கேலண்டுல்லா, பாபிஸ் போன்ற மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது.

    மனதை மயக்கும் மலர்கள் தற்போது பூக்க துவங்கியுள்ளதால் பூக்களை கண்டு சுற்றுலா பயணிகளும் மெய்சிலிர்க்கி ன்றனர்.மேலும் நடவு செய்யப்பட்டு ள்ள பல லட்சம் மலர் நாற்றுகளும் வரும் வாரங்களில் பூத்துக் குலுங்கும் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ×