search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman kidnapped"

    • அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார்.
    • புதூர் பகுதியை சேர்ந்த வியாபாரி தனது மனைவியை கடத்திச்சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பஞ்சம்தா ங்கி காக்காயம்பட்டியை சேர்ந்தவர் செவத்த முத்து(25). கூலித்தொழி லாளி. இவர் தனது உறவி னரான முத்துவிஜயா(19) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த முத்துவிஜயா திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர். செவத்தமுத்து அளித்தபுகாரில் புதூர் பகுதியை சேர்ந்த வியாபாரி பாண்டி என்பவர் தனது மனைவியை கடத்திச்சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    அவரிடம் விசாரிக்க சென்றபோது போலீஸ்நிலையத்திற்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் வரவில்லை. எனவே மனைவியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

    ×