search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுகுடி அருகே மீன்பிடி திருவிழாவில் உற்சாகமாக கலந்து கொண்ட பொதுமக்கள்
    X

    மீன்பிடி திருவிழாவில் உற்சாகமாக கலந்து கொண்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    சிறுகுடி அருகே மீன்பிடி திருவிழாவில் உற்சாகமாக கலந்து கொண்ட பொதுமக்கள்

    • சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்
    • கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும்.

    நத்தம்:

    நத்தம் தாலுகா சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டி கேசரி கண்மாயில் மழைவளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆண்டுதோறும் மழை காலத்தில் கேசரி கண்மாயில் நீர் சேகரிக்கின்றனர். கண்மாயில் நிறைந்த நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். கோடையில் நீர் வற்றும் போது மீன்பிடி திருவிழா நடைபெறுகிறது.

    சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காலை முதலே கண்மாயில் பொதுமக்கள் குவிந்தனர். முதற்கட்டமாக வெளியூர், உள்ளூர் நபர்களுக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். விரால், ஜிலேபி கெண்டை ஆகிய மீன்களை பிடித்தனர்.

    கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும். இதையடுத்து கட்டணம் இன்றி கிராமத்தினர் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் தங்களிடம் உள்ள வலை, பரி, கச்சா, கூடை, கொசுவலை, சேலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடிக்கும் முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

    முடிவில் தங்களுக்கு கிடைத்த மீன்களை பலருடன் பகிர்ந்து கொண்டன்ர். இதனால் பக்கத்து கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் மீன் குழம்பு மனம் கமகமத்தது. இதன் மூலம் கிடைத்த வருவாயை கிராமத்தில் பொது தேவைக்கு பயன்படுத்து கின்றனர்.

    Next Story
    ×