என் மலர்
திண்டுக்கல்
- முன்விரோதம் காரணமாக வடிவேல் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
- பட்டபகலில் பழனியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள என்.குரும்பபட்டியை சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது27). இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது பழனி அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறைக்காக ஊருக்கு வந்த வடிவேல் இன்று காலை பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கினர்.
மேலும் அரிவாளால் வடிவேலை வெட்டத் தொடங்கினர். உயிருக்கு பயந்து வடிவேல் பஸ் நிலையம் நோக்கி ஓடினார். இருந்தபோதும் அவர்கள் விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பஸ் நிலையம் அருகே பக்தர்கள் மற்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவத்தை பார்த்து அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட வடிவேல் உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக வடிவேல் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சி மூலம் கொலையாளிகளை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
பட்டபகலில் பழனியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பொங்கல் வைத்தல், பூக்குழி இறங்குதல், கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது
- சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம்:
நத்தம் அருகே சேத்தூர் கிராமம் களத்துபட்டியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் முதல்நாள் அம்மன் ஊர்வலம், முளைப்பாரி, வானவேடிக்கைகள் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பொங்கல் வைத்தல், பூக்குழி இறங்குதல், கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை களத்துப்பட்டி, கன்னிமார்புரம், கல்லாத்துபாலம் ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- 3 பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் என தற்போது பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
- குழந்தையின் தந்தை மற்றும்ட விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே பழக்கனூத்து தாத்தா கவுண்டனூரை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த ருக்மணிக்கு 3வதாகவும் பெண் குழந்தை பிறந்தது.
கணவன்-மனைவி 2 பேரும் கூலி வேலை செய்வதால் குடும்ப வறுமை வாட்டியது. 3 பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் என நினைத்தனர். எனவே தற்போது பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன், ஒட்டன்ச த்திரத்தை சேர்ந்த தேன்மொழி, கரூர் பரமத்திவேலூரை சேர்ந்த தமிழரசி ஆகியோர் உதவியுடன் கரூரை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு ரூ.3 லட்சத்துக்கு குழந்தை யை விற்று விட்டனர்.
குழந்தை குறித்து நர்ஸ், தம்பதியிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஒட்டன்ச த்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையி லான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை கோபி, விற்பனைக்கு உடந்தையாக இருந்த மணிகண்டன், தேன்மொழி, தமிழரசி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குழந்தையையும் மீட்டனர்.
- சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்பதால் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார்.
- வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த கேசவன் மற்றும் கரடிபாபுவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கேசவன் (வயது74). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 7ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 5 மாதமாக தனது அச்சகத்துக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
அந்த சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்பதால் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கேசவன் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கரடி பாபு (50) என்பவரும் சம்பவத்தன்று சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அருகில் இருந்த வீட்டுக்குள் ஓடி வந்தார். பின்னர் இது குறித்து சிறுமியின் சகோதரர் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் இந்த வழக்கு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் விக்டோரியாமேரி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த கேசவன் மற்றும் கரடிபாபுவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பாலமுருகன் மகள் யாஷினி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவி இன்று காலை பயணிகள் ரெயில்மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். தாமரைப்பாடி ரெயில்நிலையம் வந்ததும் ரெயிலை விட்டு இறங்கிய அவர் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 ஆயிரம் புதிய ரேசன் கடைகள் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்படும். கிடங்கு உள்ளிட்டவைகளில் பணி செய்யும் பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார்.
- விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலுவைத் தொகை ரூ.140 கோடி விரைவில் விடுவிக்கப்படும்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் புதிய ரேசன் அரிசி கிடங்கு மற்றும் பழைய கிடங்கு ஆகியவற்றை தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொழிலாளர் தினம் என்பதால் கிடங்கில் பணி யாற்றும் தொழிலா ளர்களுக்கு சால்வை அணிவித்தும் தேனீர் வழங்கியும் அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொடைக்கானலில் 49 ரேஷன் கடைகள் உள்ளன. 30550 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு மாதம் 530 மெட்ரிக் டன் அரிசி சப்ளை செய்யப்படுகின்றது. கொடைக்கானலில் இந்த மாதம் பருப்பு சப்ளை தாமதம் ஏற்பட்டது. இது சீர் செய்யப்படும். தமிழகம் முழுவதும் 2.3 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. 35 ஆயிரத்து 949 ரேஷன் கடைகள் உள்ளன. இப்போது நெல் கொள்மு தல் காலம் என்பதால் இதுவரை 35 லட்சத்து 73 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டது.
இது கடந்த ஆண்டை விட 2.14 லட்சம் கூடுத லாகும். விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலுவைத் தொகை ரூ.140 கோடி விரைவில் விடுவிக்கப்படும். கூட்டுறவு துறை மூலம் வேளாண் கடனாக ரூ.13,442 கோடி கடன் வழங்கப்பட்டு ள்ளது. சிறுதானிய விநி யோகம் ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்குரிய ஆய்வுகள் செய்யப்பட்டு ள்ளது. முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கேழ்வரகு, கம்பு ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். கம்பு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள் தமிழ்நாட்டில் விவசாயிகள் கூடுதலாக விவசாயம் செய்ய வேண்டும்.
ரேஷன் கடை களில் விநியோகிக்கப்படும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியும் பொது மக்களின் நலனுக்காக கலந்து விற்கப்படுகிறது. எனவே அச்சமின்றி பொதுமக்கள் இவற்றை உண்ணலாம். தமிழ் நாட்டில் வேளாண் கடனாக ரூ.14 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பிற்கு ரூ.1500 கோடி கடன் வழங்கப்படும். 2 ஆயிரம் புதிய ரேசன் கடைகள் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்படும். கிடங்கு உள்ளிட்டவைகளில் பணி செய்யும் பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- அடிப்படை உரிமைகள் கேட்டு வந்தால் பொதுமக்களுக்கு சரியான பதிலும், உரிய மரியாதையும் ஊராட்சி செயலாளர் செலுத்துவதில்லை
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனகூறினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எத்திலோடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட த்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது கூட்டம் முடிந்ததாக அறிவித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி உள்பட அனைவரும் எத்திலோடு ஊராட்சி மன்ற அலுவலக த்திற்கு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த ஆவாரம்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கேள்விக்கு முறையாக எந்த பதிலும் அளிக்கவில்லை எனக்கூறி ஊராட்சி மன்ற அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.
இதனையறிந்த நிலக்கோட்டை ஆணையாளர் பஞ்சவர்ணம் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அடிப்படை உரிமைகள் கேட்டு வந்தால் பொதுமக்களுக்கு சரியான பதிலும், உரிய மரியாதையும் ஊராட்சி செயலாளர் செலுத்துவதில்லை என இளைஞர்கள் ஆணையாளர் பஞ்சவர்ணத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
- காலை 11.30 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
- மழையில் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. தரைப்பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் 5 நாட்களில் மட்டும் சுமார் 23 செ.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டிய நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டங்கள் தரையிறங்கியது.
அதனை தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே பல்வேறு இடங்களை கண்டுகளித்த னர். உள்ளூர் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட னர். இந்நிலையில் இன்றும் காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மழை காரணமாக ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலின்றி ஓட்டுநர்கள் பயணம் செய்தனர்.
இருப்பினும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்ததால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட னர். தொடர் மழை காரணமாக நகரில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாலை நேரம் முதல் கடும் குளிர் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் இதமாக அனுபவித்து வருகின்றனர். இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மழையில் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
- டாக்டர்கள்,செவிலியர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள்.
- பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தரும் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பீடு மற்றும் டாக்டர்கள்,செவிலியர்கள் தங்குவதற்கான குடியிரு ப்புகள் கட்டுவதற்காக ரூ.1 கோடியே 87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் நகர்மன்றத்தலைவர் செல்லத்துரை,துணைத் தலைவர் மாயக்கண்ணன் முன்னாள் நகர் மன்றத்த லைவர் முகமது இப்ராஹிம், திண்டுக்கல் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன், கொடைக்கானல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்ரதி, நகராட்சி கவுன்சிலர் அப்பாஸ் உட்பட அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டினார்.
- துப்புரவு பணியாளரிடம் தகராறு செய்து மானபங்கம் செய்ய முயன்றதாக ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது40). இவர் ஒட்டன்சத்திரம் புளியமரத்துக்கோட்டை பகுதியில் கொட்டாங்குச்சி மூலம் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ரமேஷ் (41). என்பவர் தான் ஒரு பத்திரிகை நிருபர் என்றும் தொழிற்சாலை முழுவதையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும் தொழிற்சாலை மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டினார். இதனால் பயந்த ராஜேந்திரன் அவரிடம் ரூ.40 ஆயிரம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு மறுநாள் மேலும் ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தனர்.
ஏற்கனவே துப்புரவு பணியாளரிடம் தகராறு செய்து மானபங்கம் செய்ய முயன்றதாக ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த நிலையில் மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
- தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பெரும்பாறை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பழவிளையில் செயல்பட்டு வரும் மதுரை நாடார் மகாஜன சங்கத்திற்குட்பட்ட காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
விழாவில் 1984-87-ம் ஆண்டுகளில் படித்த 13 பேர் 36 ஆண்டுகளுக்கு பின்பு கொடைக்கானலில் சந்தித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து பேசினர். இவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பின்னர் தங்களுடைய அன்பு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
- ஏராளமான விவசாயிகள் சுமார் 500 ஏக்கரில் செவ்வாழை, கற்பூரவள்ளி, ரஸ்தாலி, நாடு உள்ளிட்ட வாழை ரகங்களை பயிரிட்டிருந்த னர்.
- 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 6200 வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோனூர், அனுமந்த ராயன்கோட்ைட, ஆவாரம்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, மயிலாப்பூர், தர்மத்துப்பட்டி, ஆதிலட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமார் 500 ஏக்கரில் செவ்வாழை, கற்பூரவள்ளி, ரஸ்தாலி, நாடு உள்ளிட்ட வாழை ரகங்களை பயிரிட்டிருந்த னர்.
வாழைக்காய்கள் நன்கு விளைந்து குலைதள்ளி இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு வர தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 6200 வாழை மரங்கள் முறிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் என்று விவசாயிகள் தெரி வித்தனர்.
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். கோடை மழையில் சுழன்று அடித்த சூறாவளி காற்றால் வாழை பயிரிட்ட விவசாயிகள் இப்பகுதியில் வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு தங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






