என் மலர்
நீங்கள் தேடியது "Ration shops with toilets"
- 2 ஆயிரம் புதிய ரேசன் கடைகள் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்படும். கிடங்கு உள்ளிட்டவைகளில் பணி செய்யும் பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார்.
- விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலுவைத் தொகை ரூ.140 கோடி விரைவில் விடுவிக்கப்படும்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் புதிய ரேசன் அரிசி கிடங்கு மற்றும் பழைய கிடங்கு ஆகியவற்றை தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொழிலாளர் தினம் என்பதால் கிடங்கில் பணி யாற்றும் தொழிலா ளர்களுக்கு சால்வை அணிவித்தும் தேனீர் வழங்கியும் அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொடைக்கானலில் 49 ரேஷன் கடைகள் உள்ளன. 30550 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு மாதம் 530 மெட்ரிக் டன் அரிசி சப்ளை செய்யப்படுகின்றது. கொடைக்கானலில் இந்த மாதம் பருப்பு சப்ளை தாமதம் ஏற்பட்டது. இது சீர் செய்யப்படும். தமிழகம் முழுவதும் 2.3 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. 35 ஆயிரத்து 949 ரேஷன் கடைகள் உள்ளன. இப்போது நெல் கொள்மு தல் காலம் என்பதால் இதுவரை 35 லட்சத்து 73 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டது.
இது கடந்த ஆண்டை விட 2.14 லட்சம் கூடுத லாகும். விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலுவைத் தொகை ரூ.140 கோடி விரைவில் விடுவிக்கப்படும். கூட்டுறவு துறை மூலம் வேளாண் கடனாக ரூ.13,442 கோடி கடன் வழங்கப்பட்டு ள்ளது. சிறுதானிய விநி யோகம் ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்குரிய ஆய்வுகள் செய்யப்பட்டு ள்ளது. முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கேழ்வரகு, கம்பு ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். கம்பு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள் தமிழ்நாட்டில் விவசாயிகள் கூடுதலாக விவசாயம் செய்ய வேண்டும்.
ரேஷன் கடை களில் விநியோகிக்கப்படும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியும் பொது மக்களின் நலனுக்காக கலந்து விற்கப்படுகிறது. எனவே அச்சமின்றி பொதுமக்கள் இவற்றை உண்ணலாம். தமிழ் நாட்டில் வேளாண் கடனாக ரூ.14 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பிற்கு ரூ.1500 கோடி கடன் வழங்கப்படும். 2 ஆயிரம் புதிய ரேசன் கடைகள் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்படும். கிடங்கு உள்ளிட்டவைகளில் பணி செய்யும் பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






