search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த நிருபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட ரமேஷ்.

    தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த நிருபர் கைது

    • செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டினார்.
    • துப்புரவு பணியாளரிடம் தகராறு செய்து மானபங்கம் செய்ய முயன்றதாக ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது40). இவர் ஒட்டன்சத்திரம் புளியமரத்துக்கோட்டை பகுதியில் கொட்டாங்குச்சி மூலம் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ரமேஷ் (41). என்பவர் தான் ஒரு பத்திரிகை நிருபர் என்றும் தொழிற்சாலை முழுவதையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும் தொழிற்சாலை மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டினார். இதனால் பயந்த ராஜேந்திரன் அவரிடம் ரூ.40 ஆயிரம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு மறுநாள் மேலும் ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தனர்.

    ஏற்கனவே துப்புரவு பணியாளரிடம் தகராறு செய்து மானபங்கம் செய்ய முயன்றதாக ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த நிலையில் மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×