என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
திண்டுக்கல் அருகே சூறைக்காற்றில் ரூ.1 கோடி மதிப்பிலான வாழைகள் சேதம்
- ஏராளமான விவசாயிகள் சுமார் 500 ஏக்கரில் செவ்வாழை, கற்பூரவள்ளி, ரஸ்தாலி, நாடு உள்ளிட்ட வாழை ரகங்களை பயிரிட்டிருந்த னர்.
- 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 6200 வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோனூர், அனுமந்த ராயன்கோட்ைட, ஆவாரம்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, மயிலாப்பூர், தர்மத்துப்பட்டி, ஆதிலட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமார் 500 ஏக்கரில் செவ்வாழை, கற்பூரவள்ளி, ரஸ்தாலி, நாடு உள்ளிட்ட வாழை ரகங்களை பயிரிட்டிருந்த னர்.
வாழைக்காய்கள் நன்கு விளைந்து குலைதள்ளி இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு வர தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 6200 வாழை மரங்கள் முறிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் என்று விவசாயிகள் தெரி வித்தனர்.
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். கோடை மழையில் சுழன்று அடித்த சூறாவளி காற்றால் வாழை பயிரிட்ட விவசாயிகள் இப்பகுதியில் வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு தங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






