என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மனைவி மீது உள்ள கோபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்ததால் வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் வாலிபரை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் கோ. கீரனூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இதன் அருகிலேயே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இங்கு புகுந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். இதைப் பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் கொள்ளை முயற்சி நடைபெறுகிறதோ என்ற அச்சத்தில் கள்ளிமந்தயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் சுற்றித் திரிந்த அவர் மனைவி மீது உள்ள கோபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சொந்த பிரச்சினைக்காக பொது சொத்தை சேதப்படுத்தக்கூடாது என வாலிபரை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக நிறுத்த கோரிக்கை விடப்பட்டது.
    • வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தங்களது போராட்டம் நடத்தினர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சி கொக்கு பிள்ளை பட்டி, ராமராஜபுரம், அணைப்பட்டி, எம். குரும்பபட்டி, என். ஊத்துப்பட்டி, எஸ். மேட்டுப்பட்டி, மட்ட ப்பாறை, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்கு வார்பட்டி, குளத்துபட்டி ,என். கோயில்பட்டி, தெப்பத்துப்பட்டி, குன்னத்துப்பட்டி, தருமத்துப்பட்டி,

    விராலிமலையன்பட்டி, விருவீடு , தாதபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக நிறுத்த கோரி பிரமலைக்கள்ளர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தங்களது போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் கழுத்தில் காயங்களுடன் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
    • திருமணமாகி 2 வருடமே ஆவதால் இளம்பெண் மர்மச்சாவு குறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    நேபாளத்தை சேர்ந்தவர் பானுபய்குரில். இவரது 2-வது மனைவி கெதாரோகையா (19).இவர்கள் பிரகாசபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது கெதாரோகையா கழுத்தில் காயங்களுடன் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடமே ஆவதால் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
    • இப்போட்டியில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று வகையாக பிரிக்கப்படு போட்டிகள் நடந்தது.

    வத்தலகுண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி யை வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாத புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடிமாட்டு வண்டிகள் கலந்துகொண்டு தும்மலபட்டி முத்தாலம்மன் கோவில் முதல் கணவாய்பட்டி ஆசிரம கால்வாய் வரை சுமார் 10கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. இப்போட்டியில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று வகையாக பிரிக்கப்படு போட்டிகள் நடந்தது.

    முதலிடம் பிடித்த மாட்டிற்கு ரூ.25001, 2-ம் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ. 20001, 3-ம் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.15001 பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழா விற்கான ஏற்பாடுகளை பொது மக்கள், மிராசுதாரர்கள் செய்திருந்தனர்.

    • கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வாகனம் நகர முடியாமல் மூச்சுமுட்டும் அளவுக்கு சிக்கி தவிக்கின்றன.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் சீசன் காலமாகும். தரைப்பகுதியில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கோடைவிடுமுறை காரணமாக இந்த மாத ங்களில் கொடைக்கான லுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க நகர்பகுதியில் ஒருவழிச்சாலை அமல்படுத்த ப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கனரக வாகனங்கள் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விதிமீறி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பிடவசதிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதுதவிர உணவகங்கள், தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் உத்தரவிட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனம் நகர முடியாமல் மூச்சுமுட்டும் அளவுக்கு சிக்கி நின்றது.

    ஒருசில பயணிகள் கொடைக்கானலுக்கு ஏன் வந்தோம் என்று சொல்லும் அளவிற்கு திரும்பிச்செ ல்லும் நிலையும் ஏற்படுகிறது. சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கா னலில் பார்க்கிங் வசதி குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதே கிடையாது. இதனால் சுற்றுலா வாகன ங்கள் நினைத்த இடத்தில் நிறுத்திச்செல்வதும், அந்த வாகனங்களில் உள்ள பொருட்கள் திருடுபோவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சுற்றுலா வரும் இடத்தில் பயணிகள் தங்கள் பொரு ட்களை இழந்து செல்லும் அவலமும் உள்ளது.

    இதுதவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். உணவகங்களில் கூடுதல் விலை வைத்து விற்பதும், காட்டேஜ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதும் தொடர் கதையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. கோடைவிழா தொடங்குவதற்கு முன்பாக இதுபோன்ற குறைபாடுகளை சீர் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலர் கண்காட்சிக்காக பேன்சி , டெல்பினியம், மேரி கோல்ட் , கேலண்டுல்லா, சால்வியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
    • மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டு ள்ளது .

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் உலகளாவிய முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு இடங்கள், பொழுது போக்கு அம்சங்கள் இருந்து வருகிறது.

    இதில் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா சுற்றுலா பயணிகளை கவருவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது . தற்போது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வகையிலான பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. மே மாத சீசன் ஆரம்பித்து உள்ள நிலையில் மலர் கண்காட்சிக்காக பேன்சி , டெல்பினியம், மேரி கோல்ட் , கேலண்டுல்லா, சால்வியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் பூத்துக் குலுங்குகிறது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டு ள்ளது . இதனை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலமாக பூக்களின் விபரங்கள் மற்றும் அதன் குடும்ப வகைகள், எந்த சமயங்களில் இவை பூக்கும் என்பது உள்ளிட்ட முழு விபரமும் அறிந்து கொள்ளும் வகை யில் தயார் செய்யப்பட்டு ள்ளது.

    இதன் மூலம் சுற்றுலா பயணிகள் எளிதாக பூக்களின் பெயர்களை கண்டறியலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கார் திண்டுக்கல்-தேனி மெயின்ரோட்டில் இன்று அதிகாலை வத்தலக்குண்டு பைபாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    மயிலாடுதுறை பூம்புகார் சாலையை சேர்ந்தவர் ரபீக் (வயது50). இவர் வெற்றிலை விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தொழில் நிமித்தமாக அடிக்கடி கேரள மாநிலம் மூணாறுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு தனது காரில் மூணாறுக்கு வந்துகொண்டிருந்தார்.

    காரில் தனது உறவினரான திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் சமீராபானு (41). உடன் வந்தார். காரை திருவாரூர் மாவட்டம் தட்சணம் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரும் வந்தார். கார் திண்டுக்கல்-தேனி மெயின்ரோட்டில் இன்று அதிகாலை வத்தலக்குண்டு பைபாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கேரள மாநிலம் வண்டிபெரியாறு பகுதியில் இருந்து டீத்தூள் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை குஞ்சுமோன் (49) என்பவர் ஓட்டி வந்தார்.

    எதிர்பாராத விதமாக கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் காருக்குள் இருந்த சமீராபானு, ரபீக், டிரைவர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். சேகர் படுகாயம் அடைந்தார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 3 பேரையும் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    • சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை கீழே தள்ளி விட்டனர்.
    • அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்

    வடமதுரை:

    வடமதுரை அருகே கோவககவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரீட்டா (வயது35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை கீழே தள்ளி விட்டனர்.

    இதையடுத்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ரீட்டா வடமதுரை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது. சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும்.
    • சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கந்தசாமி, மாவட்ட இணைச் செயலாளர் பாண்டிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது. சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னாள் தலைவர் குப்பான் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரி நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகரையொட்டியுள்ள வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி நகர் பகுதியில் புகுந்து விடுகின்றன.

    குறிப்பாக காட்டெருமைகள் குடியிருப்பு பகுதியில் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. நாயுடுபுரம் சாலை டெப்போ பகுதியில் பொதுமக்கள் சாலையிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை காட்ெடருமைகள் உண்பதால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களாக பழனியில் தங்கி இருந்தார். நேற்று காலை அடிவாரம் பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் வடிவேல் உயிரிழந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அழகாபுரியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் மாரிமுத்து (27), வீரமணி மகன் சுரேஷ் (29) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக் கொண்டனர்.

    சுரேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் அடிவாரம் பகுதியில் குதிரை வண்டி ஓட்டி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வடிவேல் இவர்களது நண்பர் ஆவார். இவர்கள் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அதன்படி கடந்த வாரம் மது குடித்துக் கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நேற்று காலையிலும் அவர்கள் மது குடித்தபோது தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வடிவேல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து மற்றும் சுரேஷ் அவரை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீரமுத்தரைய முன்னேற்ற சங்கம் சார்பாக வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    • அரசு அலுவலக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடி கணக்கில் பணத்தை பெற்று வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் எனக்கூறி பல்வேறு அமைப்பினர் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வீரமுத்தரைய முன்னேற்ற சங்கம் சார்பாக வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழக அரசே பழனி பதிவு மாவட்டத்தை சீர்குலைக்கும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பழனி பதிவு மாவட்டத்திற்கு உள்பட்ட 9 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடாக வசூல்வேட்டை நடத்தி பத்திர பதிவு நடைபெற்று வருகிறது.

    மேலும் சொத்தில் உள்ள வில்லங்கங்களை மறைத்து வில்லங்க சான்று வழங்கப்படுகிறது. அரசு அலுவலக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடி கணக்கில் பணத்தை பெற்று வருகின்றனர். எனவே அவர்களை பணிநீக்கம் செய்து குற்றவழக்கில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளன.

    தொடர்ந்து இப்பகுதியில் ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×