என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்.
கொடைக்கானலில் மூச்சுமுட்டவைக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எப்போது? -சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
- கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வாகனம் நகர முடியாமல் மூச்சுமுட்டும் அளவுக்கு சிக்கி தவிக்கின்றன.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் சீசன் காலமாகும். தரைப்பகுதியில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கோடைவிடுமுறை காரணமாக இந்த மாத ங்களில் கொடைக்கான லுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க நகர்பகுதியில் ஒருவழிச்சாலை அமல்படுத்த ப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கனரக வாகனங்கள் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விதிமீறி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பிடவசதிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர உணவகங்கள், தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் உத்தரவிட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனம் நகர முடியாமல் மூச்சுமுட்டும் அளவுக்கு சிக்கி நின்றது.
ஒருசில பயணிகள் கொடைக்கானலுக்கு ஏன் வந்தோம் என்று சொல்லும் அளவிற்கு திரும்பிச்செ ல்லும் நிலையும் ஏற்படுகிறது. சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கா னலில் பார்க்கிங் வசதி குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதே கிடையாது. இதனால் சுற்றுலா வாகன ங்கள் நினைத்த இடத்தில் நிறுத்திச்செல்வதும், அந்த வாகனங்களில் உள்ள பொருட்கள் திருடுபோவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சுற்றுலா வரும் இடத்தில் பயணிகள் தங்கள் பொரு ட்களை இழந்து செல்லும் அவலமும் உள்ளது.
இதுதவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். உணவகங்களில் கூடுதல் விலை வைத்து விற்பதும், காட்டேஜ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதும் தொடர் கதையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. கோடைவிழா தொடங்குவதற்கு முன்பாக இதுபோன்ற குறைபாடுகளை சீர் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






