என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
    X

    வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

    நிலக்கோட்டை பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

    • அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக நிறுத்த கோரிக்கை விடப்பட்டது.
    • வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தங்களது போராட்டம் நடத்தினர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சி கொக்கு பிள்ளை பட்டி, ராமராஜபுரம், அணைப்பட்டி, எம். குரும்பபட்டி, என். ஊத்துப்பட்டி, எஸ். மேட்டுப்பட்டி, மட்ட ப்பாறை, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்கு வார்பட்டி, குளத்துபட்டி ,என். கோயில்பட்டி, தெப்பத்துப்பட்டி, குன்னத்துப்பட்டி, தருமத்துப்பட்டி,

    விராலிமலையன்பட்டி, விருவீடு , தாதபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக நிறுத்த கோரி பிரமலைக்கள்ளர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தங்களது போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×