என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
    X

    இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்ற காட்சி.

    வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

    • வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
    • இப்போட்டியில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று வகையாக பிரிக்கப்படு போட்டிகள் நடந்தது.

    வத்தலகுண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி யை வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாத புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடிமாட்டு வண்டிகள் கலந்துகொண்டு தும்மலபட்டி முத்தாலம்மன் கோவில் முதல் கணவாய்பட்டி ஆசிரம கால்வாய் வரை சுமார் 10கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. இப்போட்டியில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று வகையாக பிரிக்கப்படு போட்டிகள் நடந்தது.

    முதலிடம் பிடித்த மாட்டிற்கு ரூ.25001, 2-ம் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ. 20001, 3-ம் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.15001 பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழா விற்கான ஏற்பாடுகளை பொது மக்கள், மிராசுதாரர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×