என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Double Bullock Race"

    • கர்னல்ஜான்பென்னிகுக் 182-வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
    • இளம்ஜோடி, புள்ளி மான், தட்டான்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு ஆகிய 7 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையை கட்டிய கர்னல்ஜான்பென்னிகுக் 182-வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. 3-ம் ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க தலைவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜிவ் முன்னிலை வகித்தார்.

    இளம்ஜோடி, புள்ளி மான், தட்டான்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு ஆகிய 7 பிரிவுகளில் போட்டிகள் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடத்த ப்பட்டது. மந்தைவாய்க்கால் பாலம் முதல் பென்னிகுக் மணிமண்டபம் வரை பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டி ருந்தது. ஒவ்வொரு பிரிவி லும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளுக்கும், அதன் உரிமையாளர்களு க்கும் பரிசுகள் வழங்க ப்பட்டது.

    போட்டியை காண சாலையில் இருபுறமும் ஏராளமான பார்வை யாளர்கள் நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை 5 மாவட்ட விவசாயி கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
    • இப்போட்டியில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று வகையாக பிரிக்கப்படு போட்டிகள் நடந்தது.

    வத்தலகுண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி யை வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாத புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடிமாட்டு வண்டிகள் கலந்துகொண்டு தும்மலபட்டி முத்தாலம்மன் கோவில் முதல் கணவாய்பட்டி ஆசிரம கால்வாய் வரை சுமார் 10கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. இப்போட்டியில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று வகையாக பிரிக்கப்படு போட்டிகள் நடந்தது.

    முதலிடம் பிடித்த மாட்டிற்கு ரூ.25001, 2-ம் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ. 20001, 3-ம் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.15001 பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழா விற்கான ஏற்பாடுகளை பொது மக்கள், மிராசுதாரர்கள் செய்திருந்தனர்.

    ×