என் மலர்
நீங்கள் தேடியது "கஸ்தூரி யானை ஆனந்த குளியல்"
- கஸ்தூரி யானை பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
- இயற்கையான சூழலில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு ள்ளதால் யானை உற்சாக மாக குளியல் போடுகிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் யானை கஸ்தூரி (வயது 57). இந்த யானை பெரியநாயகி அம்மன் கோவில் வளா கத்தில் வைத்து பராமரிக்க ப்பட்டு வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா, கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்களின் போது கஸ்தூரி யானை அலங்காரம் செய்யப்பட்டு பங்கேற்று வருகிறது.
யானைகள் சோர்வடை யாமல் இருக்க வருடத்துக்கு ஒரு முறை புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி பல்வேறு நட வடிக்கைகள் யானைகளை உற்சாகபடுத்தும் வண்ணம் நடைபெற்று வருகிறது.
பழனி அருகே காரமடை பகுதியில் உள்ள தோட்ட த்தில் சில ஆண்டுகளுக்கு முன் கோவில் சார்பில் யானைக்கு நீச்சல் குளம் கட்டப்பட்டது. தினமும் காலையில் ஷவர் மற்றும் மாலையில் குளத்தில் குளிக்க வைக்கப்படுகிறது. இயற்கையான சூழலில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு ள்ளதால் யானை உற்சாக மாக குளியல் போடுகிறது. வெயிலின் தாக்கம் அதிக ரித்து வருவதால் அதிக நேரம் தண்ணீரில் குளிக்க யானை ஆர்வம் காட்டி வருகிறது.






