என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் சுய லாபத்திற்காக இடித்து தள்ளி விட்டதாக தெரிகிறது.
    • கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேவுள்ள மானியதள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர். இவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையை மானியதள்ளி பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் சுய லாபத்திற்காக இடித்து தள்ளி விட்டதாக தெரிகிறது. இதனை கண்டித்தும், பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர், மக்கள் அதிகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரியிலுள்ள சலூன் கடைகள் மூடி முடி திருத்தும் தொழிலாளர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்ய வேண்டும், இடிக்கப்பட்ட கடையினை மீண்டும் கட்டி தரவேண்டும் என கூறியும் கோஷமிட்டனர்.

    • தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.
    • தீர்த்தமலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வர வில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கோ.ஈச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மகள் அர்ச்சனா (வயது 19). இவர் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தீர்த்தமலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். ஆனால், மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வரவில்லை.

    இதுகுறித்து மாது கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.

    • கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
    • 16 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

    அவ்வாறு நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 329 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 22 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி கையேடுகளையும், சமூக நலத்துறையின் சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதரவற்றோர் இல்லங்களை சார்ந்த 16 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தெரு விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் உட்பட தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
    • பஞ்சாயத்து வரவு செலவு முறையாக பராமரிக்கப்படவில்லை.

     காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இண்டமங்கலம் பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராதிகா காசிராஜன் என்பவரும் துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சங்கர் என்பவரும் இருந்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவர் மீதும் நிர்வாகம் மீதும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக தெரு விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் மாதந்தோறும் நடக்க வேண்டிய பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கூட்டம் 1½ ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. பஞ்சாயத்து வரவு செலவு உட்பட எவ்வித கணக்குகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை

    உட்பட பல்வேறு புகார்களை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. துணைத்தலைவர் சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஜோதிலட்சுமி, மங்கை ராமு, தங்கமணி ரஞ்சித், வாசுகி துரை ஆகியோர் பஞ்சாயத்து நிர்வாகம் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்காமல் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பஞ்சாயத்து தலைவர் ராதிகா மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை கண்டித்தனர்.

    இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து துணை தலைவர் சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், இண்டமங்கலம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் குறித்து காரிமங்கலம் பிடிஓ, பஞ்சாயத்து உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி பஞ்சாயத்து நிர்வாகத்தில் நிலவி வரும் சீர்கேடுகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செய்த தர்ணா போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    பென்னாகரம்,

    தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:--

    பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப் பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
    • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

    தருமபுரி,

    "தமிழ்நாடு நாள்" விழாவை முன்னிட்டு இன்று பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார். விழாவில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

    நடப்பு ஆண்டில் ஜுலை 18-ம் தேதி இன்று தருமபுரி மாவட்டத்தில் "தமிழ்நாடு நாள்" குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.

    அதேபோன்று "தமிழ்நாடு நாள்" முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையிலும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வகையிலும், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

    எனவே, மாணவ மாணவியர்கள். பொதுமக்கள் அனைவரும் "தமிழ்நாடு நாள்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • யாகத்திற்கு 108 கிலோ மிளகாய் பயன்படுத்தப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ பெரிய கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து கோவில் முன்பாக பெரிய கருப்புசாமி வாகனமான குதிரை பசு கன்றுகளுக்கு பூஜை செய்தனர் . உற்சவமூர்த்தி, கருப்பசாமி வீச்சருவா உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு பூஜைகள் செய்து தீ மூட்டி 108 கிலோ மிளகாயை தீயில் போட்டு கோவில் பூசாரி சாமி ஆடி 11 படிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் படியேறி வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற தேங்காய் உடைத்து ஏராளமான பக்தர்கள் கருப்பசாமிக்கு பொங்கலிட்டு பூஜை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    மேலும் பம்பை வாத்தியங்கள் முழங்க சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல்களை நிறைவேற்றிய மூலவருக்கு பக்தர்கள் ஆடு, கோழி, மது, சுருட்டு, மற்றும் மிளகாய் உள்ளிட்டவைகளை நேர்த்திகடன்களாக செலுத்தி வழிபட்டனர்.

    • ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள 4 ரோடு பகுதியில் மர்ம நபர் பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி சோகத்தூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் மதன்குமார் (வயது 30). பல் டாக்டரான இவர் தருமபுரி 4ரோடு பென்னாகரம் சாலையில் தனியார் பல் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் தனது கிளினிக் முன்பக்க கதவை மட்டும் மூடிவிட்டு அருகேயுள்ள கடைக்கு மதன்குமார் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த போது கிளினிக்கின் கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.2 லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மதன் குமார் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் மதன்குமார், தனது கிளினிக்கின் கதவை பூட்டாமல் விட்டு சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளே புகுந்து லாக்கரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் கிளினிக்கின் பக்கத்தில் உள்ள மெடிக்கல் கடையிலும் மர்ம நபர்கள் ரூ.6 ஆயிரத்தை திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள 4 ரோடு பகுதியில் மர்ம நபர் பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பூவரசன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
    • மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் எலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ்.

    இவரது மகன் பூவரசன் (வயது27). இவரது இவருக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், ஒரு மகளும், 3 மாதம் ஆனநிலையில் ஒரு மகனும் உள்ளனர்.

    பூவரசன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறையில் கடந்த 9 மாதங்களுக்கு சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பூவரசன் மொரப்பூரில் இருந்து கல்லாவிக்கு சென்றார். அப்போது கல்லாவி சாலையில் வழியாக வந்தபோது லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த பூவரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சகை்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பூவரசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டிய தீருவோம் என அங்கிருக்க கூடிய காங்கிரஸ் கட்சி அடம் பிடிக்கிறது.

    தருமபுரி:

    18 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அரூர் பகுதிகளும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட தமிழக விவசாயி பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முனுசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்த்தார்.

    அப்போது அவர் கூறியதாவது, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் தீர்க்கப்படாத 10 மிக முக்கிய கோரிக்கைகளை வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீண்ட காலமாக விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியாக அரசுகள் விலை நிர்ணயம் செய்யவில்லை, இந்த விவசாயிகளின் விலை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய அரசு ஏற்றுக் கொண்டாலும் கூட இதுவரை இந்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை எனவும் இந்தியாவிலேயே பால் விலை மிக மிக குறைந்த விலை தமிழ்நாட்டில் தான் இருப்பதாகவும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம் அரூர் பகுதியிலும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது.

    கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் கரை புரண்டு ஓடுவதாகவும், தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவார் என நாங்கள் போராட்டம் நடத்தவில்லை.

    விவசாயிகளை ஒற்றுமைப்படுத்தி அடுத்த கட்டமாக ஊர்வலம் பேரணி, உண்ணாவிரதம் போன்ற அடுத்தடுத்து கட்டங்களுக்கு செல்வதாகும் கிராமம் தோறும் ஒருங்கிணைக்க கூடிய சக்தியாக வளம் பெறும் வகையில் தான் நாங்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டிய தீருவோம் என அங்கிருக்க கூடிய காங்கிரஸ் கட்சி அடம் பிடிக்கிறது. இதற்கு பல்வேறு ஆயத்தப் பணிகளையும் செய்து வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் மிக கடுமையாக பாதிக்கப்படக்கூடிய 22 மாவட்டங்களில் மேகதாது அணை கட்டினால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் எனவே தமிழக முதல்-அமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவர் என்று எதிர்பார்க்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கவியரசன் அழைத்து வரப்பட்டார்.
    • கவியரசன் முழு உடல் தகுதியுடன் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கியவர் கோமா நிலையில் இருந்து மீண்டு முழு உடல் நலம் பெற வேண்டி கிராம மக்கள் அனைவரும் கூடி திருஷ்டி பரிகாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பே, தாதம்பட்டியை சார்ந்தவர் கவியரசன் (வயது 24). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று சுஜி என்ற மனைவியும் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி கவியரசன் தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வரும்போது, எதிர்பாராத விதமாக கோட்டைமேடு என்ற இடத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    ஆபத்தான நிலையில் தலையில் அடிபட்ட அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 4 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் விபத்தில் சிக்கி தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது அவரது மனைவி சுஜிக்கு பெருத்த மனவேதனை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தனது தாயிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதை அறிந்த சுஜியின் தாயார் தனது மருமகன் உடல் நலத்துடன் மீண்டு வர வேண்டும் என்றால் குலதெய்வத்திடம் நேர்த்திக்கடன் செலுத்தி ஆடிப் பண்டிகை என்பதால் அம்மனுக்கு பலியிட்டு திருஷ்டி கழித்தோம் என்றால் உடல் நலத்துடன் வருவார் என்று நம்பிக்கையூட்டியுள்ளார்.

    இதன் பேரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் கவியரசனை மருத்துவமனையின் அனுமதியுடன் விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக வரவழைக்க முடிவு செய்தனர். அதன்படி சேலம் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கவியரசன் அழைத்து வரப்பட்டார்.

    விபத்து நடந்த கோட்டைமேடு பகுதியில் பே.தாதம்பட்டி கிராம மக்கள் ஒன்று கூடி அவர்களின் குலதெய்வமான காளியம்மன், வேடியப்பன் ஆகிய இரு தெய்வங்களையும் தேரில் அமர வைக்கப்பட்டு மிகவும் பயபக்தியுடன் பரிகார பூஜைகள் செய்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்த கவியரசன் முன்பு ஆட்டு கிடா வெட்டி திருஷ்டி கழித்தனர்.

    அப்போது சக்தி வாய்ந்த காளியம்மன் மற்றும் வேடியப்பன் சாமியை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கவியரசனை சுற்றி பல சுற்றுகள் சுற்றினர், பின்பு சாமி முன்பு கிராம மக்கள் ஒன்று கூடி மீண்டும் கவியரசன் முழு உடல் தகுதியுடன் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • யாராவது உயிரிழந்தால் அவர் அவரது வீடுகளி லேயே புதைத்து கொள்ளுங்கள், இங்கே வரக்கூடாது என தனி நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • சுடுகாட்டு நிலத்தை மீட்டு தரக்கோரி சம்மந்த பட்ட துறை அதிகாரிகள், கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தோக்கம்பட்டி கிராமத்தில் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்தினை அதே ஊரை சேர்ந்த ஒருவர் அபகரித்து கொண்டதாக புகார் கொடுக்க வந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஊருக்கே பொதுவான சுடுகாட்டு நிலத்தை இப்படி அபகரித்து கொள்வது நியாயம் தானா? என தனி நபரிடம் முறையிட்ட போது யாராவது உயிரிழந்தால் அவர் அவரது வீடுகளி லேயே புதைத்து கொள்ளுங்கள், இங்கே வரக்கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் மனுவில் தெரிவித்தனர்.

    சுடுகாட்டு நிலத்தை மீட்டு தரக்கோரி சம்மந்த பட்ட துறை அதிகாரிகள், கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்தே வேறு வழியின்றி இன்று பாடை கட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மனு கொடுக்க வந்த கிராம மக்கள் கூறுகையில்,

    தங்களது மனு மீது மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு கொடுத்த ஆவணங்களான ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே திரும்ப ஒப்படைக்க போவதாகவும் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    ×