என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முனுசாமி பேட்டியளித்த காட்சி.
விவசாயிகளை ஒற்றுமைப்படுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்- விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர்
- கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டிய தீருவோம் என அங்கிருக்க கூடிய காங்கிரஸ் கட்சி அடம் பிடிக்கிறது.
தருமபுரி:
18 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அரூர் பகுதிகளும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட தமிழக விவசாயி பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முனுசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்த்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் தீர்க்கப்படாத 10 மிக முக்கிய கோரிக்கைகளை வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட காலமாக விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியாக அரசுகள் விலை நிர்ணயம் செய்யவில்லை, இந்த விவசாயிகளின் விலை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய அரசு ஏற்றுக் கொண்டாலும் கூட இதுவரை இந்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை எனவும் இந்தியாவிலேயே பால் விலை மிக மிக குறைந்த விலை தமிழ்நாட்டில் தான் இருப்பதாகவும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம் அரூர் பகுதியிலும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது.
கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் கரை புரண்டு ஓடுவதாகவும், தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவார் என நாங்கள் போராட்டம் நடத்தவில்லை.
விவசாயிகளை ஒற்றுமைப்படுத்தி அடுத்த கட்டமாக ஊர்வலம் பேரணி, உண்ணாவிரதம் போன்ற அடுத்தடுத்து கட்டங்களுக்கு செல்வதாகும் கிராமம் தோறும் ஒருங்கிணைக்க கூடிய சக்தியாக வளம் பெறும் வகையில் தான் நாங்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டிய தீருவோம் என அங்கிருக்க கூடிய காங்கிரஸ் கட்சி அடம் பிடிக்கிறது. இதற்கு பல்வேறு ஆயத்தப் பணிகளையும் செய்து வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் மிக கடுமையாக பாதிக்கப்படக்கூடிய 22 மாவட்டங்களில் மேகதாது அணை கட்டினால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் எனவே தமிழக முதல்-அமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவர் என்று எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






