என் மலர்
தர்மபுரி
- வேம்பு, புங்கை, பாதாம், மூங்கில், வாகை, தேக்கு போன்ற மரங்களை மினி வேனில் வெட்டி கடத்தியது தெரிய வந்தது.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி நேற்று இலக்கியம்பட்டி அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் கடந்த 4 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் பள்ளி வளாகத்தில் நன்கு வளர்ந்து இருந்த வேம்பு, புங்கை, பாதாம், மூங்கில், வாகை, தேக்கு போன்ற மரங்களை மினி வேனில் வெட்டி கடத்தியது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிபட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி நேற்று இலக்கியம்பட்டி அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் மரம் வெட்டப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
- விழாவில் சங்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் சச்சிதானந்தம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
- 56 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.
தருமபுரி,
தருமபுரி ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனம் கோவிலில் திருவாலங்காடு இம்முடி அகோரதர்ம சிவாச்சாரியார் நெருஞ்சிப்பேட்டை ஆயிர வைசிய மடத்தின் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆயிர வைசிய சங்க மாநில தலைவர் வேந்தர் விநாயகா மிஷின்ஸ் டாக்டர் கணேசன், ஆயிர வைசியர் சங்கம் மாநில செயலாளரும், தர்மபுரி மாவட்ட கவுரவ ஆலோசகருமான டாக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
விழாவில் சங்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் சச்சிதானந்தம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தர்மபுரி மாவட்ட ஆயிர வைசியர் சங்கத்தின் கவுரவ தலைவர்கள் புருஷோத்தமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டம் சுற்றியுள்ள ஆயிர வைசிய சமுதாயத்தை சேர்ந்த 56 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆயிர வைசிய சங்கத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் ராமசாமி மற்றும் பாலு, ஓசூர் நகர தலைவர் ராமலிங்கம், பாப்பம்பாடி கிளை தலைவர் ஞானசேகரன், சேலம் மாவட்டம் பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆத்தூர் தலைவர் மதிவதனன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திருக்கைவேல் உள்பட நிர்வாக உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் நெருஞ்சிப்பேட்டை ஆயிர வைசியர் மடம் தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் சதீஷ் என்கின்ற அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பாரதிய ஜனதா கட்சி சார்பில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு பாஜாக பட்டியல் அணி மாநில செயலாளர் சாட்சாதிபதி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜாக பட்டியல் அணி மாநில செயலாளர் சாட்சாதிபதி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் நிபத்தனையின்றி உதவித்தொகை வழங்க வேண்டும். 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்ற கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் விஷ்ணு பிரசாத், மண்டலப் பொதுச் செயலாளர்கள் விஜயராஜ், சுரேஷ், பிரசார பிரிவு மண்டலத் தலைவர் வடிவேல், மண்டலத் துணைத் தலைவர்கள் வேல்முருகன், சேகர், பட்டியல் அணி மாவட்ட துணைத் தலைவர் கந்தையன், மண்டலச் செயலாளர் சிற்றரசு, சமூக ஊடக பிரிவு மண்டலத் தலைவர் தங்கமணி, பட்டியல் அணி மண்டலத் தலைவர் பிரபு, கனகராஜ், மொரப்பூர் மேற்கு அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் இளைஞரணி மண்டலத் தலைவர் சத்தியப்பிரியன் நன்றி கூறினார்.
- கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
- சைக்கிள்களின் டயர், டியூப், சீட் கவர் ஆகியவை சேதமடையும் நிலை உருவாகி வருகிறது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள் சுமார் 500 பேருக்கு வழங்க அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச சைக்கிள்கள் பாதுகாப்பாக வைக்காமல் திறந்தவெளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் சைக்கிள்களின் டயர், டியூப், சீட் கவர் ஆகியவை சேதமடையும் நிலை உருவாகி வருகிறது. தமிழக அரசால்பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களின் பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் வரும் வகையில் அரசு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி வருகிறது.
அவர்களின் நலனில் அக்கறை கொண்டு வழங்கப்படும் இந்த சைக்கிள்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் முன்பாகவே பழுதடையும் நிலை உருவாகி வருகிறது.
பல ஊர்களில் மாணவர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் ஓட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் சைக்கிள் பெற்றவர்கள் அந்த சைக்கிள்களை தூக்கி சென்று கடைகளில் கொடுத்து பல நூறு ரூபாய் செலவு செய்து சீராக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த பள்ளியில் உள்ள சைக்கிள்கள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சேதமடைந்த இந்த சாலை வழியாக தான் அனைவரும் மருத்துவ மனைக்கும், வீடுகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது.
- இதுவரை மனுக்கள் கொடுத்தும், நேரடியாக முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து அதியமான் கோட்டை கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மண் சாலையாகவே மாறி காட்சி அளித்து வருகிறது.
மேலும் அதியமான் கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்டவையும் கிராமப் பகுதியில் நடுவில் அமைந்துள்ளதால் இச்சாலை வழியாக தான் அனைவரும் மருத்துவ மனைக்கும், வீடுகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் இரு தினங்களாக பெய்த மிதமான மழைக்கு சாலை முழுவதும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.
இதனால் இதுவரை மனுக்கள் கொடுத்தும், நேரடியாக முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
இதனால் வேறு வழியின்றி இன்று அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சேறும் சகதியுமாக மாறி உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியில் இனியும் மெத்தனம் காட்டி னால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம் என தெரிவித்தனர்.
மேலும் இந்த பகுதியில் பழுதடைந்த சாலையை மாற்றி புதிய தார்சாலை போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூட்டத்தில் 45 திட்டபணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- முறையான செலவு கணக்குகளை ஆராயாமல் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள் என வாக்குவாதம் ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நகர்மன்றம் அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமையில் இன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களும், அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 45 திட்டபணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குறுக்கிட்டு பேசியதாவது:
தருமபுரி நகராட்சியில் முன்னாள் ஆணையர் சித்ரா என்பவர் பதவி வகித்தபோது அவர் வசித்து வந்த அரசு கட்டிடத்தை நன்றாக பாதுகாத்து வந்தார். அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றபிறகு தற்போது உள்ள ஆணையர் அண்ணாமலை அந்த கட்டித்தை பராமரிப்பு செய்வதாக கூறி ரூ.9 லட்சம் வரை கணக்கு காட்டியுள்ளார். நன்றாக உள்ள கட்டிடத்திற்கு எதற்காக இவ்வளவு தொகையில் பராமரிப்பு செலவு செய்ய வேண்டும். இதுகுறித்து முறையான செலவு கணக்குகளை ஆராயமால் கூட்டத்தில் அதற்கு ஒப்பதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்.
இதேபோன்று 45 திட்டப்பணிகளில் 35 திட்டப்பணிகள் நகர்மன்றத்தில் எந்தவித அனுமதிபெறாமல் ஏற்கனவே பணிகள் முடித்துவிட்டு அதற்காக தற்போது தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள். எனவே முதலில் அனுமதி பெற்றுவிட்டு அதன்பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
13 அ.தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களை வைத்து நீங்களாகவே தீர்மானங்களை நிறைவேற்றி கொண்டு உள்ளீர்கள். இந்த செயல் கண்டனத்துக்குரியதாகும் என்றனர்.
அதற்கு அதிகாரிகள், அனுமதி பெற்ற பிறகே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.
மேலும், அ.தி.மு.க உறுப்பினர்கள் கூறும்போது:-
6-வது வார்டில் மயான சாலையில் சிலர் அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை கட்டி வருகின்றனர். இதனை உடனே சர்வேயர்களை கொண்டு அளந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறும்போது:
இதேபோல், நகராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூல் செய்து வருகின்றனர் என்று உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்காக சென்னையில் உள்ள அதிகாரிகளிடமும், கலெக்டரிடமும் ஒப்புதல் பெற்றபிறகே நகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. உறுப்பினர்களாக உள்ள 2 வார்டுகளில் மட்டும் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. மற்ற 31 வார்டுகளிலும் திட்டப்பணிகள் எதுவும் தொடங்கவில்லை. அதுவும் அ.தி.மு.க. கவுன்சிலர்களாக உள்ள வார்டுகளிலும் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது என்றும், இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிப்போம் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
அப்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் காயமடைந்தனர்.
- ஓடிவந்து 2 பேரும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் அபிஷேக் (வயது17).
இவர் மூக்கானூரைச் சேர்ந்த தனது நண்பர் சஞ்சய் (19) என்பவருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் இண்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் இருவரும் வீடு திரும்பிவந்தனர். அப்போது குண்டுசெட்டி அருகே வந்தபோது எதிரே வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், வரும் வழியிலேயே அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த சஞ்சய் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2 தினங்களாக விடிய,விடிய மழை பெய்தது.
- இந்த மழையால் அந்த பகுதியில் தார்சாலை முழுவதும் சேற்றை வாரி கொட்டியது போல் சேறும், சகதியுமாக காணப்பட்டன.
தருமபுரி,
தருமபுரி இலக்கியம்பட்டியில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ராமன் நகர், அதியமான் நகர் என்ற பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமன் நகர் மற்றும் அதியமான் நகர் பகுதிக்கு செல்லும் தார்சாலை முற்றிலும் சிதலமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக விடிய,விடிய மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதியில் தார்சாலை முழுவதும் சேற்றை வாரி கொட்டியது போல் சேறும், சகதியுமாக காணப்பட்டன. இன்று காலை அந்த வழியாக பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். அதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சாலையின் நடுவே சேற்றில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உடனடியாக தார்சாலை போட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
- தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது.
தொப்பூர்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான இன்று (25-ந் தேதி) பசுமை தாயக தினமாகவும், மரக்கன்றுகள் நடும் நாளாகவும் பா.ம.க.வினர் மற்றும் பசுமை தாயக அமைப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிபட்டி கிராமத்தில் இன்று அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
அப்போது எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகலஹள்ளி ஊராட்சி சவுளூர் ஏரிக்கரையில் 20 வகையான பறவைகளுக்கு பலன் தரக்கூடிய மற்றும் நிழல் தரக்கூடிய 500 மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யபட்டது. தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமை தாயக மாநில துணைசெயலாளர் மாது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழரசன், சரவணன், தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வெங்கடேஷ், முத்துகுமார், ராமசந்திரன், பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் காமராஜ், பச்சாக்கவுண்டர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
- கடந்த 4 நாட்களாக காலை முதலே சாரல் மழையும், மாலை நேரத்தில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
- சின்னார், மேலுமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று முதல் வரை சாரல் மழை பெய்து வருகிறது.
தருமபுரி:
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக காலை முதலே சாரல் மழையும், மாலை நேரத்தில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தருமபுரியில் மிதமான மழையும், நல்லம்பள்ளி அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழையும் பெய்தது.
அதேபோல் தருமபுரி, பென்னாகரம், கம்பைநல்லூர், அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், மகேந்திரமங்கலம், நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்த நிலையில் இரவு முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்துள்ளது.
இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தாலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை பகுதிகளில் நேற்று விடிய விடிய சாரல் மழை பெய்துள்ளது. இன்று காலையும் அந்த பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
சூளகிரி ஒன்றிய சுற்று வட்டாரமான பேரிகை, காளிங்காவரம், அத்திமுகம், வேம்பள்ளி, காமன்தொட்டி, உத்தனப்பள்ளி, சின்னார், மேலுமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்து வருகிறது.
- கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
- ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.
தருமபுரி:
கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்காரணமாக குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகர் மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து அணைக்கு நேற்று 44ஆயிரத்து 436 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 48 ஆயிரத்து 25 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து இன்று 2688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.
இதேபோல் நீர்வரத்து தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஒரு சிலதினங்களுக்குள் அணை முழு கொள்ளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 80.51 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கபினிஅணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீராக 11250 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இந்த உபரி நீரானது நாளை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்டுள்ள 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தற்போது மெல்ல மெல்ல பிலிக்குண்டுலுவுக்கு வர தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.
இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். இதன் காரணமாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் பரிசலில் சென்று நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- தருமபுரி மாவட்ட நிர்வாகம் உதவி மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து முகாமை நடத்துகின்றன.
- தகுதிக்கேற்ப மருத்து வர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
அரூர்,ஜூலை,
அரூர் கோட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம், அரூர், கடத்தூர், பாப்பிரெட்டி ப்பட்டியில் நடை பெறஉள்ளதாக கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தெரிவித்து ள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மாற்றுத்திற னாளிகளுக்கு உபகரண ங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம்கள் அரூர் கோட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளன.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் உதவி மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து முகாமை நடத்துகின்றன.
முகாமில் முடநீக்கு சாதனம், செயற்கைகால் மற்றும் கை, மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி போன்ற உபகர ணங்கள் அவரவர் தகுதிக்கேற்ப மருத்து வர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
அரூர் வட்டார வள மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாட்சாபேட்டைப் பகுதியில் வரும் 28-ம்தேதியும், பாப்பிரெட்டிப் பட்டியில் உள்ள வட்டார வளமையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரும் 31-ம் தேதியும், கடத்தூர் வட்டார வள மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆகஸ்ட் 1-ம் தேதியும் காலை 10 மணி முதல் 1 மணி வரை முகாம் நடை பெற உள்ளது.
இதில் அப்பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளி பயனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.






