என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரம் வெட்டிய விவகாரம் பள்ளியில்  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    மரம் வெட்டிய விவகாரம் பள்ளியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆய்வு

    • வேம்பு, புங்கை, பாதாம், மூங்கில், வாகை, தேக்கு போன்ற மரங்களை மினி வேனில் வெட்டி கடத்தியது தெரிய வந்தது.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி நேற்று இலக்கியம்பட்டி அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் கடந்த 4 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் பள்ளி வளாகத்தில் நன்கு வளர்ந்து இருந்த வேம்பு, புங்கை, பாதாம், மூங்கில், வாகை, தேக்கு போன்ற மரங்களை மினி வேனில் வெட்டி கடத்தியது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிபட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி நேற்று இலக்கியம்பட்டி அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் மரம் வெட்டப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    Next Story
    ×