என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை சீரமைக்காததை கண்டித்து நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
    X

    சாலையை சீரமைக்காததை கண்டித்து நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

    • சேதமடைந்த இந்த சாலை வழியாக தான் அனைவரும் மருத்துவ மனைக்கும், வீடுகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது.
    • இதுவரை மனுக்கள் கொடுத்தும், நேரடியாக முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து அதியமான் கோட்டை கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மண் சாலையாகவே மாறி காட்சி அளித்து வருகிறது.

    மேலும் அதியமான் கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்டவையும் கிராமப் பகுதியில் நடுவில் அமைந்துள்ளதால் இச்சாலை வழியாக தான் அனைவரும் மருத்துவ மனைக்கும், வீடுகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது.

    இந்நிலையில் இரு தினங்களாக பெய்த மிதமான மழைக்கு சாலை முழுவதும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.

    இதனால் இதுவரை மனுக்கள் கொடுத்தும், நேரடியாக முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

    இதனால் வேறு வழியின்றி இன்று அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சேறும் சகதியுமாக மாறி உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியில் இனியும் மெத்தனம் காட்டி னால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    மேலும் இந்த பகுதியில் பழுதடைந்த சாலையை மாற்றி புதிய தார்சாலை போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×