என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார்சாலை அமைக்காததை கண்டித்து சேற்றில் நாற்று நடும் போராட்டம்
    X

    ராமன் நகரில் பொதுமக்கள் சாலையின் நடுவே சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    தார்சாலை அமைக்காததை கண்டித்து சேற்றில் நாற்று நடும் போராட்டம்

    • கடந்த 2 தினங்களாக விடிய,விடிய மழை பெய்தது.
    • இந்த மழையால் அந்த பகுதியில் தார்சாலை முழுவதும் சேற்றை வாரி கொட்டியது போல் சேறும், சகதியுமாக காணப்பட்டன.

    தருமபுரி,

    தருமபுரி இலக்கியம்பட்டியில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ராமன் நகர், அதியமான் நகர் என்ற பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமன் நகர் மற்றும் அதியமான் நகர் பகுதிக்கு செல்லும் தார்சாலை முற்றிலும் சிதலமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக விடிய,விடிய மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதியில் தார்சாலை முழுவதும் சேற்றை வாரி கொட்டியது போல் சேறும், சகதியுமாக காணப்பட்டன. இன்று காலை அந்த வழியாக பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். அதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சாலையின் நடுவே சேற்றில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உடனடியாக தார்சாலை போட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×