என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் விடிய விடிய சாரல் மழை
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் விடிய விடிய சாரல் மழை

    • கடந்த 4 நாட்களாக காலை முதலே சாரல் மழையும், மாலை நேரத்தில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
    • சின்னார், மேலுமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று முதல் வரை சாரல் மழை பெய்து வருகிறது.

    தருமபுரி:

    தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக காலை முதலே சாரல் மழையும், மாலை நேரத்தில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தருமபுரியில் மிதமான மழையும், நல்லம்பள்ளி அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழையும் பெய்தது.

    அதேபோல் தருமபுரி, பென்னாகரம், கம்பைநல்லூர், அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், மகேந்திரமங்கலம், நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்த நிலையில் இரவு முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்துள்ளது.

    இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

    இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தாலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை பகுதிகளில் நேற்று விடிய விடிய சாரல் மழை பெய்துள்ளது. இன்று காலையும் அந்த பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

    சூளகிரி ஒன்றிய சுற்று வட்டாரமான பேரிகை, காளிங்காவரம், அத்திமுகம், வேம்பள்ளி, காமன்தொட்டி, உத்தனப்பள்ளி, சின்னார், மேலுமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×