என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி சிறுவன் சாவு
- இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் காயமடைந்தனர்.
- ஓடிவந்து 2 பேரும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் அபிஷேக் (வயது17).
இவர் மூக்கானூரைச் சேர்ந்த தனது நண்பர் சஞ்சய் (19) என்பவருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் இண்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் இருவரும் வீடு திரும்பிவந்தனர். அப்போது குண்டுசெட்டி அருகே வந்தபோது எதிரே வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், வரும் வழியிலேயே அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த சஞ்சய் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






