என் மலர்
கடலூர்
சிதம்பரம் அருகே போலீஸ்காரரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி வெள்ளாற்றின் தென்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிதம்பரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டனர். இதையடுத்து மணல் கடத்தலை போலீசார் தடுக்க சென்றனர்.
அப்போது போலீஸ்காரர் செல்வகுமாரை மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மேலமூங்கிலடி வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த வீரமணி மகன் சபா என்கிற சபாநாயகம் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மற்றவர்களை தேடி வந்த நிலையில் மேல மூங்கிலடி கிழக்கு தெருவை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி புகழேந்தி (59), நாகராஜ் மகன் விமல் ராஜ் (21) ஆகிய 2 பேரையும் சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குள்ளன் என்கிற ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கையான 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர்:
தமிழகம் முழுவதும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்தது. அது தற்போது, வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஒடிசா மாநிலம் பாரதீப்பிற்கு 180 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 23-ந்(அதாவது இன்று) தேதி மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகள் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, கடலூர் துறைமுகத்தில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் தூர புயல் எச்சரிக்கையான 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மனு அளிக்க நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களால் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் சாதி, வருமானம், வாரிசு, இருப்பிடம், முதல் பட்டதாரி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுக்கான மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். பட்டா மாறுதல் கேட்டு பதிவு செய்யப்படும் மனுக்கள் மீது விரைவாக சேவை வழங்கும் வகையில் உடனுக்குடன் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.
கோரிக்கையை நிராகரிக்க வேண்டிய நிலை இருப்பின், நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தை விரிவாக பதிவு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் அவர்களது தலைமையிடத்தில் தங்கியிருந்து பணிபுரிய வேண்டும்.
விருத்தாசலம், சிதம்பரம் சப்-கலெக்டர்கள் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, விரைவாக தீர்வு வழங்க வேண்டும். பொதுமக்கள் மனு அளிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அனைத்து மனுக்கள் மீதும் ஒரு மாதத்திற்கு மேல் நிலுவை இல்லாமல் தீர்வு காணப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, சப்- கலெக்டர்கள் சிதம்பரம் மது பாலன், விருத்தாசலம் பிரவின்குமார், வருவாய் அலுவலர் என்.எல்.சி (நில எடுப்பு) கார்த்திகேயன், ஓய்வுபெற்ற வருவாய் அலுவலர் (நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை) சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ் பவுலின் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறுபாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் இறந்தனர். 2 சிறுமிகள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுபாக்கம்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் அருகே உள்ள காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்தவள் ஆறுமுகம் மகள் மேகலா(வயது 12). இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவள் கருப்பையா மகள் மனிஷா(12). தோழிகளான இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், அவர்கள் 2 பேரும் தங்களது வீட்டிலே இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் மேகலாவும், மனிஷாவும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும், ஏரியில் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் நீச்சல் தெரியாததால் மேகலாவும், மனிஷாவும் நீரில் மூழ்கினர்.
இந்த நிலையில் குளிக்க சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுமிகளின் ஆடைகள் மட்டும் வெளியே கிடந்ததால், அவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஏரிக்குள் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சிறுமிகள் 2 பேரையும் பிணமாக மீட்டனர். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேப்பூர் அருகே புதுப்பெண் திடீரென இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர்:
வேப்பூர் அருகே வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாதன். இவருக்கும் விருத்தாசலம் பூந்தோட்டம் நகரை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சங்கீதாவிடம் சபரிநாதன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சங்கீதாவின் தாயார் ஜெயந்தி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் வேப்பூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு சபரிநாதன் கொடுமைப்படுத்தி வந்தார். இந்த நிலையில் எனது மகள் இறந்துள்ளார். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சபரிநாதனை வேப்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் அருகே எஸ்.புதூரில் ஜலகண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்த போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த மேகநாதன் மகன் ஜெய்கிருஷ்ணா (வயது 20) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜெய்கிருஷ்ணாவை தேடி வந்தனர். இதற்கிடையே தொண்டமாநத்தம் முனியப்பர் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ஜெய்கிருஷ்ணாவை, சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த காலக்கெடு விதிக்கப்பட்டதுடன், அரசின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 14.26 கோடி ரூபாய் அளவிற்கு கிசான் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 11 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
பணத்தை வசூல் செய்யும் பணியில் வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை 13 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
திட்டக்குடி அருகே விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 111 பவுன் நகைகளையும், ரூ.7¼ லட்சம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ராமநத்தம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் ஆலம்பாடி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (55), மகன் சத்தியராஜ். கடந்த 40 நாட்களுக்கு முன்பு தான் சிங்கப்பூரில் இருந்து சத்தியராஜ் திருமணம் செய்வதற்காக ஊருக்கு வந்திருந்தார்.
திருமணத்திற்கு தேவையான நகை, பணத்தையும் அவர்கள் சேகரித்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தனர். இதுதவிர சத்தியராஜியின் அக்காள் நகைகளும் அவர்களது வீட்டில் தான் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கினர். அப்போது மர்ம நபர்கள், மணி வீட்டின் பக்கவாட்டில் இருந்த மர ஜன்னலை கடப்பாரையால் உடைத்தனர். பின்னர் அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டை உள்பக்கமாக பூட்டினர்.
தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 74 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
நேற்று காலை எழுந்தபோது தான் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை பார்த்த போது, அது உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதேபோல் அதேதெருவில் வசித்து வரும் தனியார் கல்லூரி ஊழியர் வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதன் விவரம் வருமாறு:-
ஆலம்பாடி ரோட்டுத்தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் ராம்குமார்(39). இவர் தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செந்தாமரை (30), தாய் ஜோதி (60). நேற்று முன்தினம் 3 பேரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 2 பீரோவையும் உடைத்தனர். பின்னர் அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தனர். மற்றொரு பீரோ வீட்டு வராண்டாவில் இருந்தது. இதை உடைத்தால் வெளியில் சத்தம் கேட்கும் என நினைத்த கொள்ளையர்கள் அதை லாவகமாக வெளியே தூக்கிச்சென்றனர். பின்னர் வீட்டு பின்புறம் உள்ள வயல்வெளியில் போட்டு, அதை உடைத்து, அதில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதில் மொத்தம் 37 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. இதை காலையில் எழுந்து பார்த்த ராம்குமார் குடும்பத்தினர், அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 2 வீட்டாரும் இது பற்றி ராமநத்தம் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர்.
அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற விசாரணை நடத்தினார். இது தவிர கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அதர்நத்தம் ரோட்டை நோக்கி ஓடியது. அது தொடர்ந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதற்கிடையில் கடலூர் தடயவியல் நிபுணர்கள் வினோத்குமார், தசரதன் தலைமையிலான குழுவினர் 2 வீடுகளில் இருந்த முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வீடுகளில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதற்காக நியமிக்கப்பட்ட தனிப்படை போலீசாரும் அவர்களை தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் இடி- மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக தொழுதூரில் 49 மில்லி மீட்டர் பதிவானது.
கடலூர்:
வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையொட்டி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென குளிர்ந்து காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் செல்ல, செல்ல பலத்த மழையாக பெய்தது.
நள்ளிரவு 12 மணி அளவில் மழை ஓய்ந்து, பிறகு சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. இரவு 1 மணிக்கு பிறகு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. விடி, விடிய இந்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம் போன்ற பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.
கடலூர் கோ-ஆப்டெக்ஸ் எதிரே உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறிக் கிடந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதேபோல் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், தொழுதூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொழுதூரில் 49 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக மே.மாத்தூரில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-
கலெக்டர் அலுவலகம் - 42.6
கீழசெருவாய் - 32
கடலூர் - 29
குறிஞ்சிப்பாடி - 27
லக்கூர் - 24.4
காட்டுமன்னார்கோவில் - 20.4
புவனகிரி - 18
கொத்தவாச்சேரி - 17
லால்பேட்டை - 16
எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 12.5
வானமாதேவி - 12
பரங்கிப்பேட்டை - 10.2
பண்ருட்டி - 10
சிதம்பரம் - 6.2
அண்ணாமலைநகர் - 6
சேத்தியாத்தோப்பு - 6
வடக்குத்து - 5
குப்பநத்தம் - 4.8
ஸ்ரீமுஷ்ணம் - 3.1
கடலூர் திருப்பாதிரிப்புலியூர்-திருவந்திபுரம் செல்லும் சாலையில் ரூ.17 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் பிரதான சாலையில் கூத்தப்பாக்கம் கான்வெண்ட் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலையுடன் கூடிய பாலம் கட்ட ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் இருந்து தற்போது பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் ஒரு புறம் பணியும், மற்றொரு புறம் வாகன போக்குவரத்தும் நடைபெற்று வந்தது.
ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்த சாலை தற்காலிகமாக அடைக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதனால் கடலூரில் இருந்து திருவந்திபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் கூத்தப்பாக்கம் சுந்தர்நகர் வழியாகவும், திருவந்தி புரத்தில் இருந்து கடலூர் வரும் வாகனங்கள் தனலட்சுமிநகர், நடேசன்நகர் வழியாக வந்து திருப்பாதிரிப்புலியூர் சரவணாநகர் வழியாகவும் திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையில் நேற்று முன்தினம் பாலம் கட்டும் பணியின் போது அந்த வழியாக சென்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அனைத்தும் வெளியேறி வீணானது. மேலும் பிரதான குடிநீர் குழாய் உடைப்பால் தீபன்நகர், கம்மியம்பேட்டை, காமராஜர்நகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து வருகிறோம். மழை பெய்யாவிட்டால் ஓரிரு நாட்களில் சரி செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி விடுவோம் என்றனர்.
கடலூர் முதுநகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் அருகே எஸ்.புதூரில் ஜலகண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், கோவில் உண்டியலை உடைத்துள்ளனர். பின்னர் அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இந்த கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டுள்ளது. அதனால் உண்டியலில் அதிகளவில் காணிக்கை பணம் இருந்திருக்காது என கூறப்படுகிறது. மேலும் இக்கோவிலில் ஏற்கனவே 2 முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நெய்வேலி அருகே ஆடு விற்றதை கண்டித்த தந்தையை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள செடுத்தான்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டில் ஆடுகளைவளர்த்து வந்தார். இவருடைய மகன் சசிக்குமார்(20). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறை காரணமாக அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சசிக்குமார், தனது செலவுக்காக சேகரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆட்டை யாருக்கும் தெரியாமல், சசிக்குமார் விற்று விட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சேகர், சசிக்குமாரிடம் சென்று ஆட்டை ஏன் விற்றாய் என கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சசிக்குமார், தனது தந்தை என்றும் பாராமல் சேகரை காலால் எட்டி உதைத்துள்ளார். மேலும் அவரை, கையாலும், கால்களாலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சேகரின் மனைவி சக்தி, நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சசிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.