search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலம் கட்டும் பணி"

    • பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ஊராட்சி சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் பாலம் கட்டுவதற்கு நடு ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாலம் கட்டுவதற்கு ரூ.7.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை இந்த பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென சென்னமநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
    • கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலங்களான மண்ணாங்காடு வாய்க்கால் பாலம், எல்லை குமார பாளையம் வாய்க்கால் பாலம் மற்றும் எக்கட்டாம் பாளையம் ஊராட்சியில் உள்ள புதுவலசு வாய்க்கால் பாலம் ஆகிய 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இதனால் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே இருந்த மண்ணாங்காடு வாய்க்கால் பாலம் மற்றும் எல்லை குமாரபாளையம் வாய்க்கால் பாலம் ஆகிய 2 பழுதடைந்த பாலங்களையும் அகற்றிவிட்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் கூடுதல் அகலத்துடன் புதிய பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் புதுவலசு வாய்க்கால் பாலம் மட்டும் ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பதற்கு முன்பு புதிய பாலங்கள் கட்டும் பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அலங்காநல்லூரில் பாலம் கட்டும் பணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்து.
    • இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர், பஸ் நிலையத்திலிருந்து கேட்டுக்கடை செல்லும் சாலையில் முனியாண்டி கோவில் முன்பு மழைநீர், கழிவுநீர் செல்வதற்கான பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    அலங்காநல்லூர் பகுதியில் மழைக்காலங்க ளில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அங்கு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தற்போது மழை நீர் தேங்காமல் செல்வதற்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு வரும் அரசு பஸ்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறைக்கப்பட்டது.

    பஸ் நிலையத்தை தாண்டி செல்லும் ஓரிரு அரசு பஸ்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது. மேலும் பால வேலைகள் நடைபெறுவதால் அவ்வப்போது அந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கிராமப்புற பகுதியிலிருந்து வரும் அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் கேட்டுக்கடை வழியாக மதுரை செல்வதால் பயணிகள் கேட்டுக்கடையில் இருந்து அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு நடந்தே செல்கின்றனர்.

    அரசு மருத்துவமனை இந்த வழித்தடத்தில் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    பால வேலையும் தாமதமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • விழுப்புரம் நகராட்சி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் சார்பில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும்பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து, சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் விரைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் விழுப்புரம் 4 வழிச்சாலை பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அதை சீர் செய்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் (ம) பராமரிப்புத்துறையின் மூலம் 2021-2022-ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் மற்றும் பாக்ஸ் கல்வெட்டு புதிதாக கட்டுதல் என ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, தற்பொழுது புதிய பஸ் நிலையம் அருகே, புதிய பாலம் கட்டப்படுகின்றன. அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி முடிவுற்றவுடன், மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் சென்று விடுகின்ற வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஷோபனா, உதவி பொறியாளர்கள் வசந்தபிரியா, அய்யனார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×