search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் துறைமுகம்"

    • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் ஏற்படும் என மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கடலூர்:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் ஏற்படும் என மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது.
    • இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர்.

    கடலூர்:

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் வலுவான நிலையில் கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வரு கின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தீவாக காட்சியளித்து வருகின்றன. கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது. இந்த நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன் வாங்கி சென்று வருவது வழக்கம்.

    இதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் மீன் வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் வருவார்கள் என்பதால் காலை முதல் குடைபிடித்த படி மீன்களை விற்பனை செய்வதற்கு தயார் நிலை யில் இருந்தனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் இன்று காலை வரையிலும் மிக கனமழை பெய்து வருவதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொது மக்கள் பெருமளவில் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மீன் வியாபாரி கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர். மேலும் ஒரு சில பொதுமக்கள் மற்றும் தங்களுக்கு தேவை யான மீன்களை வாங்கி சென்றதும் காண முடிந்தது.

    • தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர்.
    • கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் உள்ளிட்ட பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது.

    இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மீன்கள் எதுவும் வாங்கவில்லை. இதனால் புரட்டாசி மாதத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    புரட்டாசி 3-வது சனிக்கிழமை முதல் பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர். அன்று முதல் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ளதால் மீன் மார்க்கெட்டுகளில் ஓரளவு கூட்டம் அதிகரித்து வருகிறது.

    நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகையாகும். எனவே வெளியூர்களில் வேலைபார்க்கும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கடலூருக்கு தற்போது வந்துள்ளனர். தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர். எனவே தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது. அதிக அளவில் மக்கள் வந்துள்ளதால் மீன்கள் விலையும் கனிசமாக உயர்ந்து காணப்பட்டது.

    • வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது.
    • 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

    கடலூர்:

    வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுவடைந்து நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.

    இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுக அலுவலகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

    ×