

கடலூர்:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் வலுவான நிலையில் கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வரு கின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தீவாக காட்சியளித்து வருகின்றன. கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது. இந்த நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன் வாங்கி சென்று வருவது வழக்கம்.
இதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் மீன் வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் வருவார்கள் என்பதால் காலை முதல் குடைபிடித்த படி மீன்களை விற்பனை செய்வதற்கு தயார் நிலை யில் இருந்தனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் இன்று காலை வரையிலும் மிக கனமழை பெய்து வருவதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொது மக்கள் பெருமளவில் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மீன் வியாபாரி கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர். மேலும் ஒரு சில பொதுமக்கள் மற்றும் தங்களுக்கு தேவை யான மீன்களை வாங்கி சென்றதும் காண முடிந்தது.