என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் வெயிலும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வந்தது.
கடலூர்:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் வெயிலும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வந்தது.
நேற்றிரவு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து விடிய விடிய பலத்த மழை பெய்தது.
கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.
தொடர் மழையால் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு நடந்த குறைகேட்பு கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி யூடியூப்பில் சமையல் குறிப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் :
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி ஒருவரும் வந்திருந்தார்.
அவர் கூட்டம் தொடங்கியதில் இருந்தே, பொதுமக்கள் கூறிய கோரிக்கைகள் பற்றி கவனிக்காமல் தனது செல்போனிலேயே மூழ்கியிருந்தார். அப்போது அவர் யூடியூப்பில் சமையல் குறிப்பு தொடர்பான வீடியோக்களை குறைகேட்பு கூட்டம் முடியும் வரை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த பிற அதிகாரிகள் மற்றும் மனு அளிக்க வந்த பொதுமக்கள், பெண் அதிகாரியே கூட்டத்தை கவனிக்காமல் சமையல் குறிப்பு பார்த்ததை கண்டு புலம்பினர்.
இதற்கிடையே பெண் அதிகாரி, செல்போனில் சமையல் குறிப்பு பார்த்துக்கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் விருத்தாசலத்தில் மின்னல் தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும், வருகிற 7-ந்தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை வரை விட்டு விட்டு பெய்தது. பின்னர் மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், வேப்பூர், குப்பநத்தம், சேத்தியாத்தோப்பு, தொழுதூர், வானமாதேவி, புவனகிரி உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி அலமேலு(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள விவசாயி ஒருவரது வயலில் மணிலா அறுவடை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று மாலை 3 மணியளவில் விருத்தாசலம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆலடி போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த அலமேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் தாசில்தார் சிவகுமார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின்போது, குமாரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராயர் (59) என்பவரின் மோட்டார் கொட்டகை தீப்பற்றி எரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குப்பநத்தத்தில் 63.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக பரங்கிப்பேட்டையில் 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 23.58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேப்பூர்......................................63
காட்டுமயிலூர்........................57
மே.மாத்தூர்..............................54
விருத்தாசலம்...........................42
ஸ்ரீமுஷ்ணம்...........................35.2
காட்டுமன்னார்கோவில்...28
பெலாந்துறை........................24.2
லால்பேட்டை.........................24
குறிஞ்சிப்பாடி.........................23
வடக்குத்து................................22
கீழசெருவாய்............................21
வானமாதேவி.........................8.6
தொழுதூர்.................................17
கொத்தவாச்சேரி....................14
புவனகிரி....................................13
லக்கூர்..........................................11
சேத்தியாத்தோப்பு..............10.6
கடலூர்.......................................9.4
கலெக்டர் அலுவலகம்.......8.6
சிதம்பரம்.....................................8
அண்ணாமலைநகர்.............7.8
பண்ருட்டி................................7.2
குடிதாங்கி.................................7.2
பொதுமக்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு தொற்று நோய் பரவல் ஏற்படாதவாறு செயல்படுவதற்கு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:
தமிழகத்தில் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
கடலூரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் மற்றும் இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் ஏராளமானோர் கடைகளில் திரள்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறை முகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர். மேலும் பைபர் படகில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றதை காணமுடிந்தது.
புரட்டாசி மாதம் என்றாலும் நகர் முழுவதும் இன்று காலை முதல் இறைச்சி கடைகளில் வழக்கம் போல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காணமுடிந்தது. மேலும் கடலூரில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். இதனை தொடர்ந்து இறைச்சிக்கடை முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளி உடன் நின்று முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இறைச்சி வாங்கி சென்றனர்.
ஆனால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் முககவசம் இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நின்று மீன்களை வாங்கி சென்றனர்.
இதனை பார்க்கும்போது திருவிழா காலத்தில் கூட்டம் கூட்டமாக திரண்டிருப்பது போல் எந்தவித அச்சமும் இன்றி நோய் பரவல் எளிமையாக பரவக்கூடிய அளவில் பொதுமக்களின் அலட்சியமாக இருப்பது தெரிய வருகிறது.
ஆகையால் பொதுமக்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு தொற்று நோய் பரவல் ஏற்படாதவாறு செயல்படுவதற்கு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெண்ணாடம் அருகே தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகமாடிய பிளஸ்-2 மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்:
பெண்ணாடம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் மாணவர், அதே பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று பாடப்புத்தகம் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த மாணவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் மாணவரின் தாயின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அந்த மாணவர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தன்னை பெண்ணாடம் புத்தர் தெரு அருகே உள்ள ஆர்ச் அருகில் காரில் வந்த முகம் தெரியாத 3 பேர் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.
மேலும் கடத்திச் சென்றவர்கள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வடுகப்பாளையம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றபோது, காரை விட்டு இறங்கி அருகில் உள்ள பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து செல்போனை வாங்கி பேசுவதாகவும், சீக்கிரமாக வந்து தன்னை கூட்டிச் செல்லும் படியும் கூறினார். இதையடுத்து மாணவரின் பெற்றோர், காரில் சென்று வடுகப்பாளையத்தில் இருந்த மாணவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கடத்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மாணவரிடம் துருவி, துருவி விசாரித்தனர். விசாரணையில் பள்ளி தேர்வுக்கு பயந்து மாணவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து மாணவரை நன்றாக படிக்கும்படி போலீசார் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
கடலூரில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 வாலிபர்கள் தங்கள் வீடுகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று பாதிரிக்குப்பம் ஸ்ரீரங்கத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் விக்னேஸ்வரன் (வயது 28), பக்கத்து வீட்டை சேர்ந்த கலியன் மகன் ராமச்சந்திரன் (20) ஆகிய 2 பேர் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் 2 பேரும் தங்கள் வீடுகளில் புளிச்ச கீரை வைத்துள்ளதாக அக்கம், பக்கத்தினரை நம்ப வைத்து, கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த கஞ்சா செடிகளை அழித்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே, சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினருக்கு இரவு சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த 12.2.2019 அன்று அந்த சிறுமி, தனது உறவினருக்கு இரவு 7 மணி அளவில் சாப்பாடு கொண்டு சென்றாள். பின்னர் சாப்பாடு கொடுத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
அந்த சிறுமி சேத்தியாத்தோப்பு- கும்பகோணம் சாலையில் உள்ள அவர்களது குல தெய்வம் கோவில் அருகில் வந்த போது, குமாரக்குடியை சேர்ந்த பாலகுரு மகன் தொழிலாளி திலகர் என்கிற குணசேகரன் (வயது 34). தொழிலாளி கட்டமணியார் என்கிற ஜெயசங்கர் (49) ஆகிய 2 பேரும், அந்த சிறுமியை வழிமறித்தனர்.
தொடர்ந்து அந்த சிறுமியை திலகர் தாக்கினார். பின்னர் அந்த சிறுமியை 2 பேரும் கடத்தி அங்குள்ள கோவிலுக்கு பின்னால் கொண்டு சென்றனர். அங்கு வைத்து சிறுமியை 2 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்றனர்.
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
இது பற்றி அவரது தாய் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலகர், ஜெயசங்கர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
அதில், இவ்வழக்கில் சிறுமியை தாக்கிய திலகருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்திற்காக திலகர், ஜெயசங்கருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.
இது தவிர சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 2 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும், அவர் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யும் வகையில், 30 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர், மாநில அரசு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜரானார்.
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெண்ணையூர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் அபிஷேகநாதன். இவருடைய மகன் மகிமை தாஸ் (வயது 21). அதே பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமி, கடந்த 2019ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 27.3.2019 அன்று சிறுமி பள்ளிக்கூடம் சென்றதும், சிறுமியின் தாய் சிதம்பரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் சிறுமியின் தாய், சிதம்பரத்தில் இருந்து மாலையில் வீட்டுக்கு திரும்ப நீண்ட நேரம் ஆனதால், பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு வயலில் கட்டியிருந்த மாட்டை வீட்டுக்கு ஓட்டி வரும்படி கூறினார்.
இதையடுத்து சிறுமி அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மகிமை தாஸ், சிறுமியை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற விவசாயி ஒருவர், மகிமை தாசை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி சிறுமியின் தாய், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகிமை தாசை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எம்.எழிலரசி தனது தீர்ப்பில் மகிமை தாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள்படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
சிதம்பரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.கே.தோட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதகாலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் பலர் நேற்று காலி குடங்களுடன் அப்பகுதியில் ஒன்று திண்டனர். பின்னர் அவர்கள், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி சிதம்பரம்-சீர்காழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து நான் முனிசிபல் ஊராட்சி மன்ற தலைவரிடம் பேசி தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதனை ஏற்று பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூரில் இருந்து புதுவைக்கு அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் அரசு பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கடலூர்:
மத்திய அரசின் வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 1 ஆண்டாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்துக்கு வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் ஆதரவு அளிக்குமாறு கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் துண்டுபிரசுரம் வழங்கி ஆதரவு கேட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த போராட்டத்துக்கு பெரும்பான்மையான பஸ் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து இன்று பஸ்களை இயக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடலூரில் இருந்து புதுவைக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் முழுமையாக இயங்காததால் பொதுமக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்லமுடியாமல் அவதியடைந்தனர். மேலும் ஒருசில இடங்களில் பஸ்சுக்காக பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
கடலூரில் இருந்து புதுவைக்கு அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் அரசு பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுவை செல்லும் பயணிகள் அரசு பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு ஏறினர்.

கடலூர் மஞ்சக்குப்பம், புதுநகர், முதுநகர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூர்:
வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய கலிங்கப்பட்டிணம் என்ற இடத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சிகாரணமாகவும், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் பலத்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
கடலூர் மஞ்சக்குப்பம், புதுநகர், முதுநகர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இடி-மின்னலுடன் பலத்தமழை பெய்ததால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு மின்தடை ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்விநியோகம் இல்லாததால் கடலூர் நகரமே இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தபோதும், நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக கடலூர் பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.
கடலூர்:
மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளது.
இது மேலும் வலுவடைந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே நாளை (26 -ந்தேதி) காலை கரை கடக்கும். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நேரடி தாக்கம் இருக்க வாய்ப்பில்லை.
ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.