என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 47). இவர் ராமநத்தம் அருகே பெரங்கியத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் வேலை முடிந்ததும், கடையில் வசூலான ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 630 ரூபாயை, பையில் வைத்துக் கொண்டு கடையை பூட்டினார். பின்னர் அவர் கடையின் அருகில் நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் ஒயர் அறுந்து கிடந்ததால், பிரசன்னா பணம் இருந்த பையை மோட்டார் சைக்கிள் பெட்டியின் மீது வைத்து விட்டு, சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், மோட்டார் சைக்கிள் பெட்டியின் மீது வைத்திருந்த பணத்தை திருடினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசன்னா, திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இதுகுறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெயகீர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சிவகுமார் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல் 8-வது தெருவில் வசித்து வரும் ஞானப்பிரகாசம் மனைவி அந்தோணிமேரி(65) என்பவருடைய வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கத்தையும் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த 2 வீடுகளிலும் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
மேலும் என்.எல்.சி. ஆபீசர் நகரில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மனைவி சாந்தா என்பவருடைய வீடு மற்றும் அதே தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சக்கரவர்த்தி ஆகியோரது வீடுகளிலும் மர்மநபர்கள் திருட முயன்றனர். அப்போது அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், மர்மநபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் கொள்ளை நடந்த வீடுகள் மற்றும் திருட்டு முயற்சி நடந்த வீடுகளை பார்வையிட்டு, அங்கு பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு அடுத்தடுத்து 4 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை, திருட்டு முயற்சி சம்பவங்களால் வடலூர் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் வெள்ளாற்று தரைப்பாலம் உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் கோட்டைக்காடு, ஆதனக்குறிச்சி, பாசிகுளம், முள்ளுக்குறிச்சி உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் முடிவடையாமல் உள்ளதால் அருகில் உள்ள தரைப்பாலத்தை 2 மாவட்ட மக்களும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1 வாரமாக இந்த பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் வெள்ளாற்று தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் 2 மாவட்டத்தையும் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 கிராம மக்களும் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இதே போல் செம்பேரி-தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலையும் துண்டிக்கபட்டது. இதனால் கடலூர் -அரியலூர் மாவட்ட கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராசு (வயது 55). பா.ம.க. பிரமுகர். தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார்
கடந்த மாதம் 19-ந் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ரமேஷ் எம்.பி.யை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை நீதிபதி பிரபாகரன் தலைமையில் நடந்தது. ரமேஷ் எம்.பி. தரப்பில் வக்கீல்கள் சிவராஜ், கதிர்வேலன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல் மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 55). பா.ம.க. பிரமுகர்.
இவர் பணிக்கன் குப்பத்தில் உள்ள கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார். கடந்த மாதம் 19-ந் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இதனை தொடர்ந்து கோவிந்த ராசுவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லாப்பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ரமேஷ் எம்.பி. தவிர மற்ற 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பதாக ரமேஷ் எம்.பி. கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் எம்.பி. சரணடைந்தார்.
இதையும் படியுங்கள்...அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஸ்ரீமுஷ்ணம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சின்னத்துரை மனைவி இன்பவள்ளிக்கு சொந்தமான 8 ஆடுகளும், தென்பாதி பகுதியை சேர்ந்த ராசமாணிக்கம் மகன் ஆறுமுகத்துக்கு சொந்தமான 5 ஆடுகளும் வீட்டின் அருகே மேய்ச்சலில் இருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த 13 ஆடுகளும் பலியானது.
இதுபற்றி தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின்னல் தாக்கியதில், செத்த ஆடுகளை பார்வையிட்டதோடு, உடற்கூறு ஆய்வு செய்து, புதைத்தனர்.






