என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 861 பேர் பலியான நிலையில், 62 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிதம்பரத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணும், 58 வயதான நபரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் உள்பட 2 பேரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
Next Story






