search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லபட்ட காட்சி
    X
    மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லபட்ட காட்சி

    வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட தரைப்பாலம் - 40 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

    கடந்த 1 வாரமாக இந்த பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் வெள்ளாற்று தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் வெள்ளாற்று தரைப்பாலம் உள்ளது.

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் கோட்டைக்காடு, ஆதனக்குறிச்சி, பாசிகுளம், முள்ளுக்குறிச்சி உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் முடிவடையாமல் உள்ளதால் அருகில் உள்ள தரைப்பாலத்தை 2 மாவட்ட மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 1 வாரமாக இந்த பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் வெள்ளாற்று தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால் 2 மாவட்டத்தையும் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 கிராம மக்களும் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

    இதே போல் செம்பேரி-தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலையும் துண்டிக்கபட்டது. இதனால் கடலூர் -அரியலூர் மாவட்ட கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். 

    Next Story
    ×