search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைகேட்பு கூட்டம்"

    • குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிற னாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    கூட்டத்தில் பட்டா தொடர்பான 103 மனுக்களும், முதியோர் உதவி த்தொகை தொடர்பாக 58 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 62 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 20 மனுக்களும்,ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 77 மனுக்களும், இது தொடர்பாக தர மனுக்கள் 207 ஆக மொத்தம் 550 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியத் தொகை ரூ.25 ஆயிரம் வங்கி பரிவர்த்தனை மூலம் பெறுவதற்கான ஆணையை ஒரு பயனாளிக்கும், 2 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.13600 மதிப்பீட்டிலும், மேலும் ரூ.4200 மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு கண்கண்ணாடி மற்றும் ஸ்மார்ட் ஸ்டிக் ஆகியவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் அவர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது.
    • மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்பு கூட்டம்நாளை 7 ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது என்று செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்பு கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 7 -ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் மு.ராஜாத்தி தலைமையில் நடைபெறுகிறது. இதில், உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குட்பட்ட மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
    • பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ரேஷன் குறைகேட்பு கூட்டம், நாளை 11ம் தேதி நடைபெற உள்ளது. மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு, மைவாடி நரசிங்காபுரம், உடுமலையில் தொட்டம்பட்டி, ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், குறைகேட்பு கூட்டம் நாளை, 11ம் தேதி நடைபெற உள்ளது.

    காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன்கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.

    ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 31 ந்தேதி (செவ்வாய் கிழமை) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.
    • விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட் கலெக்டர் பாலசுப்ர மணியம் விடு த்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    ஜனவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பா ட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற 31 ந்தேதி (செவ்வாய் கிழமை) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும். கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.

    கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணிமுதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படு கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் இக்குறைகளுக்கு சம்மந்த ப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரியபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் தமிழ்நாடு உழவன் பேரியக்கம் மாநில செயலாளர் குறிஞ்சிப்பாடி குமரகுரு பேசுகையில் 2016 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுகிறது. இரண்டு அடி முதல் வழங்கப்பட்ட கரும்பு கடந்த ஆண்டு முழு கரும்பாக வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்த்து பண்ருட்டி கடலூர் சிதம்பரம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்க வேண்டும்.

    இல்லையெனில் விவசாயிகள் விஷம் குடித்து சாவதை தவிர வேறு வழியில்லை. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே முழுமையாக விற்பனை செய்ய முடியும். ஆகையால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றார். நல்லூர் சுப்பிரமணி:-எங்கள் பகுதியில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த பலருக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை . இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மங்களூர் மகாராஜா:- திட்டக்குடி வெலிங்டன் ஏரியை கட்டிய வெலிங்டன் பிரபுவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். 

    முன்னதாக கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயி ராஜசேகர் திடீரென்று இறந்ததால் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.

    • காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.
    • மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது .இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயக் குறைகேட்பு கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது.
    • தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பா ட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (23- ந்தேதி) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அரங்கத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. எனவே கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.

    கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் காலை 8 மணிமுதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் இக்குறைகளுக்கு சம்மந்தப் பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    ×