கடலூரில் 31-ந் தேதி நடக்கிறது விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

31 ந்தேதி (செவ்வாய் கிழமை) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
கடலூரில் 31-ந் தேதி நடக்கிறது விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட் கலெக்டர் பாலசுப்ர மணியம் விடு த்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

ஜனவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பா ட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற 31 ந்தேதி (செவ்வாய் கிழமை) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும். கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.

கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணிமுதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படு கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் இக்குறைகளுக்கு சம்மந்த ப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரியபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com