என் மலர்tooltip icon

    கடலூர்

    கொடி கம்பம் மாயமான சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம்- பாலூர் கடைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் வைக்க ஏற்பாடு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் கொடிக்கம்பத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு அப்போது மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

    சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரச கூட்டத்துக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

    நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் பாலூர் கடைத்தெருவில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தின் அருகே தங்களது கட்சியின் கொடி கம்பத்தை திடீரென்று நட்டு விட்டு சென்றனர்.

    இன்று காலை அங்கு வந்த விடுதலை சிறுத்தை பிரமுகர்கள், தங்களது கட்சி கொடி கம்பத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடலூர்-பாலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்கள் இயங்காததால் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.

    போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 75-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    போராட்டக்காரர்கள் ஏற்கனவே தங்களது கட்சி கொடி கம்பத்தை வைப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமை யில் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. எனவே, உடனடியாக கோட்டாட்சியர் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    தகவல்அறிந்த வருவாய் கோட்டாட்சியர் அதியமான கவியரசு சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

    90 சதவீத அ.தி.மு.க.வினர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதே தொண்டர்களின் எண்ணம் எனவும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    புவனகிரி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதுகுறித்து கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே சசிகலா அ.தி.மு.க. உறுப்பினரே கிடையாது.

    90 சதவீத அ.தி.மு.க.வினர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தும். அவரை மீண்டும் கட்சியில் சேர்கக்கூடாது என்பதே தொண்டர்களின் எண்ணம்.

    அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.

    பெரியகுளத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தேவையற்றது. இது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்துள்ளது. அது தற்காலிகம் தான். மீண்டும் அ.தி.மு.க. எழுச்சிபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பாலூர் கடைத்தெருவில் நட்டு வைத்த கொடி கம்பம் திடீரென மாயமானதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம்- பாலூர் கடைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் வைக்க ஏற்பாடு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் கொடிக்கம்பத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு அப்போது மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

    சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரச கூட்டத்துக்கு வருமாறு அழைத்தனர்.

    அதன்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

    நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் பாலூர் கடைத்தெருவில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தின் அருகே தங்களது கட்சியின் கொடி கம்பத்தை திடீரென்று நட்டு விட்டு சென்றனர்.

    இன்று காலை அங்கு வந்த விடுதலை சிறுத்தை பிரமுகர்கள், தங்களது கட்சி கொடி கம்பத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடலூர்-பாலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்கள் இயங்காததால் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.

    போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    போராட்டக்காரர்கள் ஏற்கனவே தங்களது கட்சி கொடி கம்பத்தை வைப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. எனவே, உடனடியாக கோட்டாட்சியர் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் யாரும் வரவில்லை. எனவே போராட்டம் தொடர்ந்தது.

    சம்பவ இடத்தில் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    கடலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக வெற்றிபெற்ற 45 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றதை முன்னிட்டு பந்தல் மற்றும் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்று, 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்துமுடிந்தது. இதில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள், அ.தி.மு.க, பா.ஜ.க., பா.ம.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தங்களது தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கடலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக வெற்றிபெற்ற 45 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றதை முன்னிட்டு பந்தல் மற்றும் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 45 வார்டு கவுன்சிலர்களும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது இதனைத்தொடர்ந்து தலா 5 கவுன்சிலர்கள் என 45 கவுன்சிலர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் உறுதி மொழி மற்றும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் மாநகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    மகாசிவராத்திரியை முன்னிட்டு பாடலீஸ்வரர் கோவில் முன்பு பரதநாட்டிய விழா நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் இரவு முழுவதும் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    கடலூர்:

    மகா சிவராத்திரி விழா கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

    முன்னதாக மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 8 மணிக்கு முதல்கால பூஜை, 11 மணிக்கு முதல் 2வது கால பூஜை, இன்று அதிகாலை 1.30 மணி முதல் லிங்கேத்பவர் அபிஷேகம், 2 மணிக்கு முதல் 3வது கால பூஜை, 4 மணிக்கு 4வது கால பூஜை நடைபெற்றது.

    இன்று காலை அதிகார நந்தி கோபுர தரிசனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பாடலீஸ்வரர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நந்தீஸ்வரர் வாகனத்தில் சாமி கோவிலில் இருந்து வெளியில் வந்து கோபுரம் முன்பு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடனும் வருகை தந்து கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பயபக்தியுடன் விளக்கேற்றி சாமியை வழிபட்டு சென்றனர். அப்போது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    முன்னதாக நேற்று மாலை மகாசிவராத்திரியை முன்னிட்டு பாடலீஸ்வரர் கோவில் முன்பு பரதநாட்டிய விழா நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் இரவு முழுவதும் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள வில்வநாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வில்வநாதேஸ்வரர் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பிரதோ‌ஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால் தேன் சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு முழுவதும் வில்வநாதேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 17 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி செல்ல பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 27). இவருக்கும் அண்ணாதுரை என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தற்போது அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.

    கடந்த மாதம் 27-ந் தேதி ஜீவிதா தான் வசித்து வரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த ஜீவிதா உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த வளையல், நெக்லஸ், தங்க காசு, கைச்செயின் உள்பட சுமார் 17 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து புவனகிரி போலீசில் ஜீவிதா புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கூரைப்பேட்டை பகுதியில் செயல்படும் குறைந்த அளவிலான முந்திரி மதிப்பு கூட்டு அலகு மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருதாசலம் பகுதியில் புதுக்கூரைப்பேட்டை பகுதியில் செயல்படும் குறைந்த அளவிலான முந்திரி மதிப்பு கூட்டு அலகு மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அரசு தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யும் வகைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சின்ன கண்டிகுப்பம் கிராமத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    கலெக்டருடன் வேளாண்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுதாமதி, கோட்டாட்சியர் ராம்குமார், நேர்முக உதவியாளர் அரங்க நாதன், தாசில்தார் தனபதி, தோட்டக்கலைத் துறை சுரேஷ், விருத்தாசலம் தோட் டக்கலை உதவி இயக்குனர் ஆனந்தி மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனர்.
    பதவி பிரமாணம் ஏற்கும்போது 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் திடீர் என மயங்கி விழுந்தார். இதனால் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை கவுன்சிலர்கள் இன்றுகாலை நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றனர்.

    நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி புதிய கவுன்சிலர்களுகு பதவி பிரமாணம் செய்து வைத்தார். துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பதவி பிரமாணம் ஏற்கும்போது 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் திடீர் என மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மற்ற கவுன்சிலர்கள் அவரை மீட்டு மயக்கத்தை தெளிய வைத்தனர். இதனால் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    புவனகிரி அருகே 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தென் தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அருகே உள்ள கிராமத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபரும், சிறுமியும் திருமணம் செய்து கொள்வதற்காக தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    இதையடுத்து அந்த சிறுமி மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பிவிட்டார். அப்போது அவரது பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்தனர். காதலித்த வாலிபரை நம்பி சென்று திருமணமும் செய்யவில்லை. வீட்டுக்கு திரும்பி வந்தால் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளாமல் திட்டுகிறார்கள் என்ற மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொதுவாக ஒரு நபர் சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின், மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு தங்கி விடுவது வழக்கம்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்தவர் கொளஞ்சி. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். அவரது மனைவி அமுதா. விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர்களது மகன் நிஷாந்த் (வயது21). டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிஷாந்த் தன் உடலின் பாலியல் செயல்பாடுகள் மாற, தான் ஒரு திருநங்கை என்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனே வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சம் அடைந்தார். பின்னர் தனது பெயரை நிஷா என மாற்றிக்கொண்டார்.

    நிஷாவின் உணர்வுக்கு மதிப்பளித்து, உயிரியல் யதார்த்ததை உணர்ந்த அவரது பெற்றோர் நிஷாவை வீட்டுக்கு அழைத்தனர். பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார்.

    அவருக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை மங்கையாக அவரது பெற்றோர் அங்கீகரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் நிஷாவுடன் படித்த பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, விருந்து உபசரிப்பில் பங்கேற்றனர்.

    பொதுவாக ஒரு நபர் சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின், மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு தங்கி விடுவது வழக்கம். அவ்வாறு செல்பவருக்கு மூத்த திருநங்கைகள், மஞ்சள் நீராட்டு விழா நடத்தி, அவரை பெண்ணாக அங்கீகரிப்பதுண்டு. இந்நிகழ்ச்சியை முதன்முறையாக ஒரு திருநங்கையின் குடும்பத்தினரே செய்து உள்ளனர்.
    மூலவர் சாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன்தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திப் பெற்ற பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ் வரர் கோவிலில் மாசி மாத சோம வார பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன்தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. 

    பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை ஆகியமலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பிரதோ‌ஷ நாதர் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    புவனகிரி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேத்தியாத்தோப்பு:

    புவனகிரி அருகே மிராலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 50). இவருக்கு சொந்தமான விளைநிலத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டது. பின்னர் வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு அவர், வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. உடனே டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது.
    ×