என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    புவனகிரி அருகே 17 பவுன் நகை கொள்ளை

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 17 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி செல்ல பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 27). இவருக்கும் அண்ணாதுரை என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தற்போது அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.

    கடந்த மாதம் 27-ந் தேதி ஜீவிதா தான் வசித்து வரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த ஜீவிதா உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த வளையல், நெக்லஸ், தங்க காசு, கைச்செயின் உள்பட சுமார் 17 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து புவனகிரி போலீசில் ஜீவிதா புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×